பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/52


 லுங்கியை, உடம்பை அசைத்து இரண்டு கைகளாலும் கட்டிக்கொண்டு மேலும் பேசுகிறார்.

"நான் இப்படமெடுக்கும் முயற்சியில் பலவாறாகத் தொல்லைப்படுகிறேன். படத்துறையில் உள்ளவர்களிடமெல்லாம், என் இயற்கைக் குணத்துக்கு மாறாக நடந்து கொள்கிறேன். இவையெல்லாம் நான் எதிர்பார்க்காத - என் வாழ்க்கையில் நடக்கக் கூடாத நிகழ்ச்சிகள்! இவைபற்றியெல்லாம் நான் சிறிதும் பொருட்படுத்தாமல் இருப்பது எதற்காகத் தெரியுமா? இரண்டே இரண்டு காரணங்களுக்காகத்தான்.

"ஒன்று; போகத்தகாத வழியில் போய்க்கொண்டிருக்கும் திரைப்படத் துறையை நமது தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படும் சீர்திருத்தப் புரட்சிக் கூடமாக மாற்ற வேண்டும்."

"இரண்டு; இந்தப் படத்தின் மூலம் கிடைக்கின்ற வருவாயில் குறைந்தது இரண்டுலக்க ரூபாயை ஒதுக்கித் தமிழருக்கு அறிவொளியூட்டும் பெரிய நூலகம் ஒன்றைச் சென்னையின் மையமான இடமொன்றில் அமைக்க வேண்டும்.

"அந்த நூலகத்தில் இல்லாத பயன்மிகு நூல்களே உலகத்தில் இல்லை எனும் வகையில் பல்துறை இலக்கியச் செல்வங்களையும், ஆராய்ச்சி நூல்களையும் குவித்து வைக்க வேண்டும். அந்த நூலகத்தில் பிறமொழி கற்றறிந்த தூய தமிழறிஞர்களை வேலைக்கமர்த்த வேண்டும். அவர்கள் உலகின் மூலை முடுக்குகளிலுள்ள சீர் திருத்த முற்போக்கு இலக்கியங்களையெல்லாம் தமிழிலே மொழிபெயர்க்க வேண்டும். அதே போன்று தமிழறிஞர்களின் தரமான இலக்கிய நூல்களையெல்லாம் மொழி பெயர்த்து உலகெல்லாம் பரப்பவேண்டும்.மேலும் இந்த நூலகத்தில் பலபிரிவுகளை ஏற்படுத்தி, நைந்த எழுத்தாளர்களுக்கும் வறுமை வாய்ப்பட்ட கவிஞர்கட்கும் வேலை