பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65/என் தந்தையார்



றைப் பார்த்ததும் வந்ததே கோபம்! 'புளி! அங்கே பெரிய பானைப்புளி! அப்படிச் சின்னப்பானைப் புளி! எதுக்கு? பத்து வருஷத்துக்குப் புளியா... பால அடிப்ப!’ என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டார்.

வாத்தியார் சுப்புரத்தனம் என்றால் எல்லாருக்கும் கொஞ்சம் நடுக்கந்தான். எப்போதும் அவர்கையில் ஒரு கூட்டம் இருக்கும். வீட்டில் கத்தி, அரிவாள், தடி எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

சில சமயங்களில் ஓய்வு வேண்டி என் தந்தையார் அரசாங்க மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொள்வதும் உண்டு. பள்ளியிலிருந்து மருத்துவ விடுப்பு எடுப்பதற்காக அரசாங்க மருத்துவரிடம் சென்று மருத்துவச் சான்றிதழ் (Madical Certificate) கேட்பார். அவர் கொடுக்க மறுத்தால் 'பத்திரிகையில் எழுதி உன் குட்டை அம்பலப்படுத்துவேன்' என்று மிரட்டி விட்டு வந்து விடுவார். அன்று மாலை மருத்துவரே வீடு தேடிவந்து மருத்துவச் சான்றிதழை வழங்கிச் சமாதானப் படுத்திவிட்டுப் போவார். மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அங்கேயே கவிதை எழுதிப் போடுவார். நாங்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வருவோம்.

பிரெஞ்சு நாட்டில் விழிமலை என்றோர் இடமுண்டு. அம்மலை அந்நாட்டு மக்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. அம்மலையின் ஊற்றுநீர் மருந்துத் தன்மை வாய்ந்ததென்றும், அந்நீரை அருந்திய நோயாளிகள் நோய் நீங்கப் பெறுவர் என்றும் பிரெஞ்சு மக்கள் நம்புகின்றனர். அந்தக் காலத்தில் அந்நீரைப் புட்டிகளில் அடைத்துப் புதுவைக்குக் கொண்டுவந்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்குக் கொடுப்பர். நோயாளிகள் அதை விரும்பி அருந்துவர். ஆனால் என் தந்தையார் அதைக் கைகழுவப் பயன்படுத்துவார்.