பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71/என் தந்தையார்



களின் மீது கொண்ட அளவிறந்த பற்றின் காரணமாகக் கீழ் வகுப்புகளுக்கே என் தந்தையார் ஆசிரியராக இருப்பதுண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியரான பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் இதைப் பற்றிக் குறிப்பிட்டு, "என்ன? பாரதிதாசன் அட்டைக் கிளாஷ் வாத்தியார் தானே"[1] என்று ஒருமுறை கேவலமாகப் பேசிவிட்டார். பண்டிதமணி அடுத்த முறை கூட்டத்தில் பேசப் புதுச்சேரிக்கு வந்தபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து, அவ்வாறு பேசியதற்காக அவரை மன்னிப்புக் கேட்கும்படி செய்தார்கள்.

ஏழை மாணவர்கள்பால் என் தந்தையாருக்கு எப்போதும் அன்பும் பரிவும் உண்டு. தேர்வு மேற்பார்வையாளராக இருக்கும்போது ஏழைப்பிள்ளைகளுக்கு இவரே சொல்லிக் கொடுத்து மதிப்பெண் போட்டுத் தேர்விலும் வெற்றியடையும்படி செய்து விடுவார். ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்கும் சில பெண்கள், தனிப் படிப்புக்காக வீட்டுக்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் பெண்களுக்குக் கல்வியோடு பண்பாட்டையும் புகட்டுவது இவர் வழக்கம். பெண்கள் இரட்டைச் சடை போட்டுக் கொண்டு வந்தால் இவருக்குப் பிடிக்காது. உடம்பு மறைய ஆடை உடுத்த வேண்டுமென்று வற்புறுத்துவார். 'பெண்களுக்கு அலங்காரம் தேவையில்லை; தாயுள்ளமே தேவை' என்று அடிக்கடி கூறுவார்.

என் தந்தையார் எதற்கும் கண்கலங்கமாட்டார். என் தங்கை ரமணிக்குப் பிறகு பிறந்த கைக்குழந்தையொன்று ஏழுதிங்களில் இறந்தபோது கூட அவர் கண் கலங்கவில்லை. ஆனால் பாரதியாரைப் பற்றி யாராவது