பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.






நானும் என் தங்கை ரமணியும் பள்ளிச் சிறுமிகளாக இருந்த நேரம். நான் எப்போதும் பள்ளிக்கு ஒழுங்காகச் சென்றுவிடுவேன். தங்கை ரமணி அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவாள். இதையெல்லாம் கவனிப்பதற்கு என் தந்தையாருக்கு நேரமிருக்காது. ஆசிரியர் தொழிலும், அரசியலும், கவிதையும் அவருக்குச் சரியாக இருக்கும்.

ஒருநாள் நான் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். என் தங்கை ரமணி பள்ளிக்குப் புறப்படாமல் முரண்டுபிடித்துக்கொண்டிருந்தாள். தந்தையார் அறைக்குள் உட்கார்ந்து மும்மரமாக எழுதிக்கொண்டிருந்தார். என் தாயார் கூச்சலிடத் தொடங்கினார். “பள்ளிக்குப் போகாம சின்னப்பொண்ணு ஏமாத்திக்கிட்டிருக்கிறா. நீங்க அதைப்பத்தி கொஞ்சமாவது அக்கறை எடுத்துக்கறீங்களா... உங்க வேலையுண்டு; நீங்க உண்டுண்ணு இருந்தா பெண்களோட படிப்பு என்னாகறது?” என்று என் தந்தையாரைப் பார்த்து முறையிட்டார் என் தாயார். என் தந்தையார் எதுவும் பேசவில்லை. அமைதியாக எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் எந்தவிதச் சலனமும் தென்படவில்லை. அவ்வாறு அவர் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தது எங்கள் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது. நானும் என் தங்கையும் பள்ளிக்குச் சென்றுவிட்டோம்.

அடுத்தநாள் காலை நாங்கள் பள்ளிக்குப் புறப்பட்டுக்