பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/78



நீ பயப்படாதேன்னு சொன்னா என்ன அருத்தம்? நீ வந்தா, 'இது இப்படியிருக்கு அப்பா அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக் கோ'ன்னு சொல்லணுமே தவிர, நீ பயப்படாதே’ன்னு சொன்னா அது தப்பில்லையா? ஒருவன் சோசியத்தை நம்பிப் பயந்து விடுகிறான் என்றோ, துணிச்சலா இருக்கிறான் என்றோ சொன்னால் அவனை மடையன் என்றுதா சொல்லனும்" என்று காட்டமாகத் தாக்கிவிட்டார். வெலவெலத்துப் போய் விட்டார் சோதிடர்.

"சுப்புரத்தினம்! நான் கிழவன்! கோவிச்சுக்கிறாதே! நீ சொல்றதும் சாிதான்! எல்லோரும் பயந்துக்கிட்டேயே இருக்காங்க! ஆன, உன்னைப்போல இருக்கிறவங்ககிட்ட அப்படிச் சொல்லுவது தப்புதான்!" என்று அழாக்குறையாகச் சொன்னர் சோதிடர்.

'அது இருக்கட்டும் அண்ணே! நீ கையைக் கழுவிக் கிட்டுவா, சாப்பிடலாம்’ என்று சோதிடர் தலையில் 'ஐசை' வைத்தார் கவிஞர்.

எதற்கும், எங்கும், யார்க்கும் அஞ்சுவது என்பதே அவர் வாழ்க்கையில் இருந்ததில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சி சரியான சான்று.

1955 ஆம் ஆண்டு புதுவையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு 'மக்கள் முன்னணி', என்ற கூட்டமைப்பு வெற்றி பெற்றது. பல்லாயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுக் கவிஞர் சட்டமன்ற உறுப்பினரானார். மூத்தஉறுப்பினர் என்ற முறையில் இவர் தலைமையில்தான் சட்டமன்ற முதல் கூட்டமே துவங்கப்பட்டது. அத்தேர்தலில் வெற்றி பெற்ற மற்றோர் உறுப்பினரும் நண்பருமான திருவாளர் உசேன் அவர்கள் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்-