பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/80



புரியவில்லை. சுமார் பத்து ஆண்டுகள் கழித்து இப்போதுதான் புரிந்தது. செல்வர்கன் மட்டுமே உண்ணக் கூடிய நெய்யில் பொரித்த கோழிக் கறியைப் பெரும்பாலும் ஏழைகள் மட்டுமே உண்ணக் கூடிய ஊறுகாய் வாழ வைத்து விட்டதே என்றால் - செல்வர்களை ஏழைகளே வாழவைக்கிறார் என்பது அதன் பொருள். இக்கருத்தை விளக்கவே பாவேந்தர் அவ்வாறு கூறினர். உண்ணும் போதும் உறங்கும் போதும் கூட அவர் சம தர்மச் சிந்தனையோடு வாழ்ந்தார் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த சான்றாகும்.”

கீர்த்திகொன் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால்-எங்கள்
சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!