பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவேந்தரின் 50ஆவது வயதுக்கு முற்பட்ட குடும்பச் செய்திகளை உணர்ச்சி பூர்வமாக அவர் மகளார் திருமதி சரசுவதி கூறியிருக்கிறார். அக்கட்டுரை படிப்பவர் உள் ளத்தைத் தொடும்படி அமைந்துள்ளது.

பாவேந்தரின் இரண்டாவது மகளார் திருமதி வசந்தா நல்ல எழுத்தாற்றல் உள்ளவர். சொல்வதைச் சுவை படச் சொல்கிறார். பாவேந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பல செய்தித்தாள்களில் சிறுசிறு துணிக்கைகளாக நிறைய எழுதி வெளியிட்டுள்ளார். அஃதோர் தனி நூலாகவே அமையும் தகுதியுடையது. இந்நூலில் ஓரிரு செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

திருவாளர் மன்னர்மன்னன் பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை இளமையிலிருந்தே முறைப்படத் தொகுத்து எழுதிக்கொண்டிருக்கிறார். அது பாவேந்தரின் முழுமை பெற்ற வரலாறாக அமையும். அவருடைய கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமென்று நினைத்து அவருக்குக் கடிதம் எழுதினேன். அவரும் உள்ளம் உவந்து ஒரு கட்டுரை அனுப்பிவைத்து இத்தொகுப்பைச் சிறப்பித்திருக்கின்றார்.

முத்தமிழ்க் காவலர் பாவேந்தரோடு நீண்டநாளாகப் பழகியவர். பாவேந்தரைப்பற்றிய அவருடைய மதிப்பீடுகள் தமிழுணர்வின் அடிப்படையில் இலக்கிய நயம் பொருந்த அமைந்திருக்கின்றன. திருவாளர் திருலோக சீதாராமின் கட்டுரை ஒரு கவிஞனுக்கே உரிய பெருமிதத்தோடு எழுதப்பட்டுள்ளது.

திருவாளர் மு.செல்லப்ப ரெட்டியார் பாவேந்தர் நடத்திய நாடகக்குழுவின் பொறுப்பாளராக இருந்தவர். பாவேந்தரின் நாடகத்துறை அனுபவங்களைக் கூறுவதற்கு இவரைத் தவிரத் தகுதியானவர் வேறுயாருமில்லை. அந்த வகையில் இவரது கட்டுரை இத்தொகுப்-