பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

🌕
இவர் பாவேந்தர் என்ற இலக்கியப் பேராற்றின் வடி கால்; புரட்சித்தென்றலில் பூத்த இளவேனில்: தேன் கவிதை தீட்டிய கனக சுப்புரத்தினத்தின் ஆண் கவிதை!

இவர் கவிதை மொழியான ஃபிரெஞ்சையும், கரும்பு மொழியான த மி ழை யும், கற்றுத்தெளிந்தவர். இவருக்கு பல்லாக்கையும் பிடிக்கும், பரணரையும் பிடிக்கும்.

பாவேந்தர் தம் வாழ்க்கையில் காதலோடு தொகுத்த பாட்டுக் குறுந்தொகையான இவர், இன்று பாவேந் தரின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்புகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார் .

நான்கைந்து முத்துக்களைக் கோத்துக் கோத்துப் பாவேந்தர் நளினமாக எழுதிய உரைநடை, இவர் கையிலும் கொஞ்சி விளையாடுகிறது.

அச்சத்தை அறியாத பாவேந்தர் மாலையில், இக் கட்டுரை மணமிக்க ஒரு பிச்சிப்பூ!
🌕