பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85/அச்சம்-அவர் அறியாதது!


னன உனக்கு இளம் வயதிலிருந்தே அச்சம் என்பது இன்னதென்று தெரியாமல் போய் விட்டது,’’ என்று கூறிஞர் அரங்கநாநன்.

O

'அச்சந்தவிர்' என்றார் பாரதி, 'அச்சத்தின் வேர் மடமை’ என்றார் பாவேந்தர். பாடல்களில் மட்டுமல்லர்; வாழ்க்கையிலும் அச்சத்தை அறியாதவர் என்பதற்குப் பல சான்றுகள் உள. ஒரு நிகழ்ச்சி. பாவேந்தரே கூறுகிறார்.கேளுங்கள்:

"புதுவையில் அடைக்கலமாகியிருந்த பாரதியார் குழாத்துக்கு அயல் நாடுகளிலிருந்து அடிக்கடி செய்திகள் வரும். என் மூலமாகத்தான் புரட்சி வீரர்க்குத் தகவல் போய்ச் சேரும். இதைப்பற்றி அன்றைய ஆங்கிலத் துப்பறிவாளர்க்கும் தெரியும். வந்த தகவல் என்ன என்பதை அறிந்துகொள்ளத் துடிப்பார்கள். அவர்களை மடக்கி அனுப்புவதுதான் எங்களுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது.

மாடசாமி புதுவையில் தங்கியிருந்ததை அறிந்து கொண்டு துப்பறிவாளர்கள் புதுவையில் மொய்த்தார்கள். மாடசாமியைப் புதுவையிலிருந்து அயல் நாட்டுக்கு அனுப்பி விடுவது என்று முடிவு எடுத்தாகி விட்டது. ஆனால் அதுவரைக்கும் மாடசாமியைக் காப்பாற்றியாக வேண்டுமே!

மயூரேசன் என்பவர் அன்றைய வால்காட் கம்பெனியில் வேலை செய்தவர். ஆங்கிலத் துப்புத் துலக்கிகளுக்கு அவர் உளவு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த மயூரேசன் அரவிந்தர் வீட்டிலிருந்த புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய ஐந்து நூல்களை எப்படியோ களவாடிச் சென்று விட்டார். இந்தவிபரம் எனக்குத் தெரியும். ஒருநாள் நடராஜாச் சாரியின் நாடகம் பார்த்துவிட்டுத் திரும்பிய அரங்கநாதனும், நானும் சற்றும் எதிர்பாராமல் மயூரேசன் வீட்டில்