பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89/அச்சம்-அவர் அறியாதது!



நான் சாத்தின கிடைச்சிடும்! வீண்வம்பை வளர்க்காதீங்க!" என்று எச்சரிக்கை விடுத்தார் பாவேந்தர்.

கடை சாத்தப்பட்டுவிட்டது. மறுநொடியில் வெளியில் காத்திருந்த மக்கள், ஊரில் வேறு எங்காவது கடை திறந்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்துவரக் கலைந்து சென்று விட்டனர்.

ஒரு சிறிய வெற்றிலை பாக்குக் கடையும் இல்லை...... மக்கள்நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன வீதிகள்.

கடைகளைத் திறக்காவிட்டால் கடும் விளைவு ஏற்படும் என்று எச்சரித்து இரவோடு இரவாகக் கலகக்காரர்கள் சிலரை மாற்றுக் கட்சியினர் அமர்த்தியிருந்தனர்.

ஒருசிறிய கலகக் குறியும் இல்லாமல் கிளர்ச்சி நடைபெற வேண்டும் என்ற திட்டத்தில் இறங்கினார் பாவேந்தர்; அவ்வாறே நடைபெற்றது! “உரிமைக்குப் போராடுகின்றவர்கள், ஊர் அமைதியைக் குலைப்பதைத் தவிர்க்க வேண்டும்; ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டும்; அது பொது நலனுக்காக மட்டுமே அமைய வேண்டும்' என்பார் தந்தையார். அவர்படைத்த குடும்ப விளக்கு கூறுகிறது.

தலைவன் தலைவியர்கள்
தங்கள் குடும்ப
அலைநீங் கியபின்-
அயலாா -நிலைதன்னை

நாடலாம் என்னாமல்
நானிலத்தின் நன்மைக்குப்
பாடு படவேண்டும்
எப்போதும் -நாடோ