128 அருளாளன் வரும் வெள்ளாற்றின் கரைமேல் திருநெல்வாயில் அரத்துறையில் நெடுங்காலமாக எழுந்தருளியிருக்கும், நிலாவை வீசும் வெள்ளைச் சந்திரனைத் திருமுடியில் வைத்திருக்கும் தூய பெருமானே! 'நல்ல வாயிலை அமைத்தார்; வீட்டுக்குள் நடந்தார்; வேண்டிய உடை வகைகளை உடுத்தார்; பிறகு மயிர் மரைக்கலானார்; முடிவில் இறந்தார்' என்று உலகத்தில் வாழ்வானது வெறும் சொல்லாகிப் பின்பு அச்சொல்லும் கழிவதை அடியேன் அறிந்து நின்னைத் தொடர்ந்து புகலாகப் புகுந்தேன். நான் உறுதி பெற்று உய்யப் போவதற்குரியதாகிய ஓரிடத்தைச் சொல். கல் - பாறை. மா-பெரிய நிலா என்றது நிலவு என்று வந் த்து, நிலா நிலவு என்று வந்தது போல, நீடுநெடுங்காலம். நிலா என்பது நில என்று செய்யுளிற் குறைந்து வந்தது. கின்மலன் மலம் அற்றவன்; இறைவனாகிய பதி இயல்பாகவே மலங்களி ளின்றும் நீங்கினவன். வாயில் வீட்டு வாயில்; வாயில் செய்தார். என்றாரேனும் வீட்டைக் கட்டியதையே கருதினார். நானிலம் - உலகம்; நிலத்தைக் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரித்துச் சொல்வது தமிழ் மரபு. பாலை என்ற ஒன்று இருப்பினும் அது இயற்கையான நிலப் அன்று; சில காலத்தில் சில இடங்களில் பாலைத் தன்மை டாகும். இயற்கையாக இருப்பவை பாலைலயுத் தவிர மற்ற நான்குமேயாகும். அதனால் நிலத்தை மானிலம் என்று சொல் வது தமிழில் ஒரு மரபாகிவிட்டது. சொல்லாய்க் கழிகின்றது. சொல்லாகி வீணாகின்றது. கழிகின்றது என்பதற்கு வாழ்க்கை என்ற எழுவாயை வருவித்துக்கொள்ளவேண்டும். சூழல்-இடம். இடம் என்றது நிலப் பகுதியை அன்று; 'யாரிடம் போவேன்? என்று கேட்பதுபோல, எவ்விடம் செல்வேன் என்று கேட்கிறார்.) பகுதி உண் நான் உய்வதற்குரிய இடம் வேறு இல்லை' என்பது குறிப்பு. திருநெல்வாயில் என்பது நடுநாட்டில் உள்ள தலம். இது ஏழாந் திருமுறையில் மூன்றாம் திருப்பதிகத்தில் உள்ள முதற் பாட்டு. -
பக்கம்:அருளாளன் 1954.pdf/37
Appearance