உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் இனிமை இயற்கை அழகைக் காணும்பொழுது மனத்தில் உண்டாகும் இன்பம் அளப்பரியது: கவியுள்ளம் படைத் தவர்களுக்கு அந்த அழகு பலபல கற்பனைகளை உண்டாக்கு கின்றது. 'கலைஞனுடைய கண்களுக்குத்தான் இயற்கை யின் எழில் மிகமிக இனிதாகத் தோற்றும். சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு பெரிய கலைஞர். தம்முடைய உள்ளத்தில் தோன்றுகின்ற உணர்ச்சிகளை யெல்லாம் அழகிய சொற் களாலே கோலம் செய்து கவியாகப் பாடும் ஆற்றல் உடையவர். . இறைவன் படைத்த பொருள்கள் எல்லாவற்றிலுமே அழகு நிரம்பி இருக்கிறது. ஆனால் அதைக் காணும் ஆற்றல் பெற்ற கண்தான் எல்லாருக்கும் இருப்பதில்லை. கண் இருந்தும் காணாத குருடர்களாக மற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். கலைஞனோ இயற்கையின் எழில் நலங்களை யெல்லாம். காணும் கண் படைத்தவனாக இருக்கிறான். அவனுடைய காட்சியில் எல்லாம் அழகாகவே தோற்று கின்றன.நல்ல நிலாவிலே கருவேல மரத்துக்குக்கூட ஒரு சேர்பை உண்டாகும். கவிஞனுடைய காட்சியிலே இப்படித்தான், உலகம் முழுவதும் அழகே உருவாகத் தோன்றும். சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கருப்பறியலூருக்குச் சென்றார். சோழ நாட்டில் வளம் பொருந்திய ஊர் அது; வாழையும் நெல்லும் கரும்பும் சிறந்து வளரும் ஊர் நடந்து போகும்பொழுதே ஒரு பக்கத்தில் வாழைகள் நெருங்கி அடர்ந்து வளர்ந்திருப்பதைக் கண்டார். வேலிக் காலிலே வாழைகளை நட்டிருக்கிறார்கள். வேலிதோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/80&oldid=1725582" இலிருந்து மீள்விக்கப்பட்டது