பக்கம்:அருளாளர்கள்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நம்மாழ்வார் 89

பிறர் தயவை நாடின் அந்த உதவியால் பயனே இல்லை. எனவே பொறிபுலன்களின் சேட்டையிலிருந்து விடுபட்ட ஆழ்வார் போன்றவர்களின் துணை வேண்டும்.

ஆனால் நம்மால் துணைக்கு அழைக்கப்படும் ஆழ்வார் போன்ற பெருமக்கள் பொறிகளால் தமக்கு அல்லல் நேரும் பொழுது முழுதற் பொருளின் துணையையே நாடுகின்றனர்.

“ஓர் ஐவர் வன்கயரை என்று நான் வெல்கிற்பன்

உன் திருவருள் இல்லையேல்’

- (frrarr; 2747)

என்றும்

... ஐவரால் வினையேனை

மோதுவித்து உன் திருவடிச் சாதியாவகை நீ தடுத்து என்பெறுதி? அந்தோ!

(: 2746)

என்றும் -

‘வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை வலம் முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்”

- (நாலா: 2752) என்றும், பாடி அருளியது பொறிகளிலிருந்து விடுபட்ட இப்பெருமக்கள் யாருடைய உதவியை நாடி நின்றனர் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இனி இப்பொறி புலன்களை என்ன செய்தனர் இப்பெரியார்கள். பிறநாட்டில் தோன்றிய பிற சமயத் தார்கள் பொறிபுலன்களை அடக்கவும் ஒடுக்கவும் முயன்று பெருந்தோல்வி அடைந்தனர். இந்நாட்டில் தோன்றிய சைவ வைணவப் பெரியார்கள் இப்

7.