பக்கம்:அருளாளர்கள்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மாழ்வார் 97

‘குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ! என் செய்கேன்

உலகத்திரே! (Emaum: 890)

என்றும் பிறந்த பாடல்கள் படிமத்தை மட்டும் கண்டு பாடப்பட்டவை அல்ல!

இவ்வுலகத்தில் மானிடராய்ப் பிறந்ததன் அருமை யாதெனில் பொறிகளையும் அவற்றின் பற்றுக் கோடாய புலன்களையும் இவை இரண்டையும் அனுபவிக்கும் மனத்தையும், அதனின் அப்பாற்பட்டு நிற்கும் அந்தக் காரணங்களாய் சித்தம், புத்தி, அகங்காரம் என்பவற்றையும் பெற்றிருத்தலேயாம்.

இவற்றின் உதவி கொண்டு நிகழ்வதே அனுபவம் எனப்பெறும். எனவே அனுபவத்தைப் பெறுதற்கு உறுதுணையாகவுள்ள இக்கருவி கரணங்களுடன் உள்ள மானிடப் பிறப்பை இப்பெருமக்கள் பெரிதும் விரும்பினர். தாங்கள் கருதியபடி பொறி புலன்கள் பணி செய்தால் மானிடப் பிறப்பைவிடச் சிறப்புடையது எதுவுமில்லை எனக்கருதினர்; பாடவும் செய்தனர்.

‘இச் சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே’ (நாலா: 873)

என்றும்,