98 * அருளாளர்கள்
‘தேனர்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவனே’
(நாலா 678)
‘எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே
(நாலா. 631)
‘அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே’
- (நாலா: 685)
என்றும் பாடிய பாடல்கள் இப்பொறிகளுடன் இருந்து
அவனைக் கண்டு தொழுது பெறும் அனுபவத்தையே பாராட்டுவதால் தோன்றியவையாகும்.
இதே கருத்தைத் தான் நம்மாழ்வார்,
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் தெழிதரல் அருவித் திருவேங்கடத்து எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே’
(நாலா: 2326) ‘எக்காலத்து ஏந்தையாய் என்னுள் மன்னில், மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்’ -
- (: 2289) என்றும் பாடியுள்ளார். . -
இக்கருத்தை நன்கு விளங்கிக் கொண்ட சேக்கிழார் அடியார்களின் இலக்கணம் கூறவந்த இடத்து, கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார்’
(பெ. பு: 143)