பக்கம்:அருளாளர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் * 99


என்று கூறுகிறார். மேலும் நம்பியாரூர் (சுந்தர மூர்த்தி நாயனார்) சிதம்பரத்தில் சென்று இறைவனுடைய தாண்டவ இடத்தில், தரிசனத்தைக் கண்டார் என்று கூறும் இடத்தில்,

'தெண்ணிலா மலர்ந்த வேணியாய்! உன்தன்
திருநடம் கும்பிடப்பெற்ற
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியத் தொருத்தார்'

(பெ. பு. 253)

பணிந்தார் என்றும் கூறுகிறார்.


இதுகாறுங் கூறியவற்றால் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பிற சமயத்தாரைப் போல், பொறிபுலன்களை வெறுத்து ஒதுக்கி, அடக்கி நிறுத்த முயலாமல் அவற்றின் துணை கொண்டே இறைவனை வழிபடவும் அவன் திருவருளைப் பெறவும் முயன்றார்கள் என்பது வெளிப்படும்.

இத்துணைப் பாடுபட்டும் பொறிபுலன்களை இறைவனிடம் செலுத்துவது அத்துணை எளிதன்று. பெரிதும் முயன்று செலுத்தினாலும் திருவருள் உடனே கைகூடிவிடும் என்றும் சொல்வதற்கில்லை. எத்துணைப் பாடுபட்டு இப்பெருமக்கள் திருவருளைப் பெற்றார்கள் என்று அறிவதும் நம் போன்றவர்கட்கு ஒரு படிப்பினை யாகும். ஒரு மாதம் கோயிலுக்குப் போய் அபிஷேகம், அர்ச்சனை முதலியன் செய்து விட்டு உடனே அதன் பயனை எதிர் பார்க்கிறோம். பயன் கிடைக்கவில்லை என்றாலோ அன்றி எதிர் பார்த்ததற்கு மாறாக ஏதேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/110&oldid=1542993" இலிருந்து மீள்விக்கப்பட்டது