100 * அருளாளர்கள்
நடைபெற்றுவிட்டாலோ கடவுளை ஏசவும் பேசவும் தயாராகி விடுகிறோம்.
உலகியல் பயன் ஒன்றைக் கருதி இறைவனை வழிபடுவதை பெருந்தவறு என்று கூறுவர் நம் முன்னோர். கருணைக் கடலாகவும், அடியார் துயரங்களை களைப வனாகவும் உள்ள பெருமானிடம்சென்று நம் குறைகளைக் கூறிவருவது என்பது ஒன்று. நம் பெரியோர்களும் அதனைச் செய்துள்ளனர். ஆனால் ஒரு பயனை விரும்பிச் சென்று வேண்டுதல் என்பது தவறு; அதிலும் அற்பமான உலகியற் பயன்களை விரும்பிக் கோவிலுக்குப் போவதும் வழிபாடு செய்வதும் உண்மைப் பக்திக்கு முற்றிலும் புறம்பானதாகும். அனைத்தையும் படைத்து ஒவ்வொருவர் உயிருடன் கலந்து நிற்கும் பரம்பொருளிடம் ஒன்றை வேண்டுவது எவ்வாறு தவறாகும்? தாயினிடம் தமக்கு இன்னது வேண்டும் என்று குழந்தை கேட்பது இல்லையா? அதுபோல அனைவருக்கும் தாயான இறைவனிடம் கேட்பதில் என்ன தவறு என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றக்கூடும். கேட்பதில் தவறில்லை. ஆனால் எதனைக் கேட்பது என்பதில் தான் பிரச்சனை தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோரில் ஒருவராகிய கடுவன் இளவெயினனார் என்ற புலவர். இறைவனிடம் எதனைக் கேட்க வேண்டும் என்பதை மிக விளக்கமாக பரிபாடல் பாடலில் கூறுகிறார்.
ஐய நின்மட்டும் ... அதாவது, நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் கேட்பதுபோல பொன்னைப் பொருளை, இன்பங்களை
இறைவனிடம் சென்றுகேட்பது அறியாமையின் பாற்படும். அவனிடம் என்ன கேட்க வேண்டும்? -