பக்கம்:அருளாளர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் 🞸 101

‘என்பு இழை கோப்பதுபோலப் பணிவாடை ஈர்கின்றது என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று

ஒருவாய்ச் சொல்

என் பிழை க்கும்? இளங்கிளியே! யான் வளர்த்த நீ

அலையே?'
(நாலா: 2121)

இத்துணை தூரம் தம் பிழையை நினைந்து வருந்திய இப்பெருமக்கள் மறுபடியும் மறுபடியும் அவன் திருவருள்கிட்ட வேண்டும் என்ற ஒரே கருத்தினராய், ஏகாக்கிர சித்தத்துடன் பக்தி செய்கின்றனர். இவர்கள் பக்தியின் ஆழத்தையும் ஒருமைப்பாட்டையும் அறியமுடியாத உலகம் இவர்களைப் 'பித்தர்கள்'என்று எள்ளி நகையாடுகிறது.

இதோ விடை கூறுகிறார் கவிஞர். அன்பு, அறம், அருள் என்ற மூன்றையும் தருக! என்றுதான் இறைவனிடம் வேண்டவேண்டும். இன்றுகூட இறைவனிடம் பொன்னையும், பொருளையும், போகத்தையும் வேண்டும் நம்மிடையே இப்பரிபாடல் கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டுவதை உணர்ந்து பயனடைய வேண்டும்.

பயன் ஒன்றையும் கருதாமல் அவன் திருவருள் ஒன்றையே நாடி வழிபடும் இப்பெரியோர்கட்கு மட்டும் எளிதில் அவனருள் கிடைத்துவிட்டது என்று நினைப்பதும் சரியன்று. இதோபெருமான் பாடுகிறார்.

‘காணா வாராய் என்று என்று, கண்ணும் வாயும்

துவர்ந்து அடியேன்

நாணி, நல்நாட்டு அலமந்தால், இறங்கி, ஒருநாள்நீ

அந்தோ!'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/112&oldid=1542997" இலிருந்து மீள்விக்கப்பட்டது