பக்கம்:அருளாளர்கள்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 அருளாளர்கள்

காண்வாராய்! கருஞாயிறு உதிக்கும் கருமா மாணிக்க நாள் நல மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி

அம்மனே!

(நாலா. 2899)

ஆழ்வார் பெருமானிடம் வேண்டியதுதான் யாது? அப்பெருமானைச் சென்று காண்டல் என்பது இயலாத காரியம் ஆகலின் அவனே அருள் கூர்ந்துதான் காணுமாறு வரவேண்டும் என்று வேண்டினாராம். எவ்வாறு என்று நினைக்கிறீர்கள்? கண்ணும் வாயும் துவர்த்து (சிவக்க)” வேண்டினாராம். மேலும் நாணி அலமந்து வேண்டி னாராம். இப்படி வேண்டிவிட்ட காரணத்தால் அவனை அழைப்பதற்கு உரிய தகுதி தன்பால் உள்ளதென்றோ, வரவேண்டிய கடப்பாடு அவனுடையதென்றோ கருத வில்லை. பின்னர் என்ன அடிப்படையில் வேண்டுகிறார்? ஐயோ பாவம்! கண்ணும் வாயும் சிவக்கின்ற அளவு அலமந்து வேண்டுகிறானே என்று இரங்கி, அந்த இரக்கத்தின் காரணமாக வரவேண்டுமாம். இறைவனை நேரே காணும் பேறுபெற்ற இந்தப் பெருமக்கள் தம் சிறுமையையும் அவனுடைய அளப்பரிய பெருமையையும் உணர்ந்து அவன் அருள்வது அவனுடைய கருணை யினாலேயே என்பதை உணர்ந்து நன்றி பாராட்டு கின்றனர். இதே கருத்தைத் திருநாவுக்கரசரும்,

‘சிவன்எனும் நாமம்தனக்கே உடைய செம்மேனி எம்மான் அவன்னனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன் - தனையான் பவன் எனுநாமம் பிடித்து பன்னாள் அழைத்தால் திரிந்து இவன் எனைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று

எதிர்ப்படுமே” (திருமுறை: 4, 112, 9) என்று பாடுகிறார்.