பக்கம்:அருளாளர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் 🞸 103


இறைவனின் இறப்ப உயர்ந்த தன்மையை நன்கு அறிந்திருந்த இப்பெருமக்கள் தம் சிறுமையையும் ஓயாமல் அகற்றுவதோடு நில்லாமல் அவனைக் காண வேண்டும் என்னும் தம் தாபத்தையும் ஓயாமல் கூறிக் கொண்டிருந்தனர்.

‘சீலம் இல்லாச் சிறியனேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞானமூர்த்தி! நாராயணா!

என்றுஎன்று

காலந்தோறும் யான் இருந்த, கைதலைப் பூசல் இட்டால், கோலமேனி காணவாராய்; கூவியும் கொள்ளாயே’

(நாலா: 2480)

‘அடியேன் சிறிய ஞானத்தன்; அறிதல் யார்க்கும்

அரியானை,

கடிசேர் தண்ணந் துழாய்க் கண்ணி, புனைந்தான்
செடியார் ஆக்கை, அடியாரைச் சேர்தல் தீர்க்கும்

திருமாலை

அடியேன் காண்பான் அலற்றுவன்; இதனில் மிக்கு

ஒர் அயர்வுண்டே?'
(நாலா 2132)

என்றெல்லாம் நம்மாழ்வார் பாடுகின்றமை கோயிலுக்குச் சென்று வந்தவுடன் நம் விருப்பம் எல்லாம் நிறைவேறி விட வேண்டும் என்று நினைக்கும் மந்த மதிகட்கு ஒரு நல்ல பாடமாகும்.

பல்காலும் அரற்றியும் இறைவன் திருவருள் கிட்டாதபொழுதும் இவர்கள் அவனையோ அவன் கருணையையோ குறை கூறுவதில்லை. அதன் மறுதலையாகத் தம் பிழையையே நினைத்து வருந்துவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/114&oldid=1543515" இலிருந்து மீள்விக்கப்பட்டது