பக்கம்:அருளாளர்கள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 அருளாளர்கள்

தம்முடைய தவறுகள் காரணமாகத்தான் இறைவன் அருள மறுக்கிறான் போலும் என்றே கருதித் தம் பிழையை நினைந்து கண்ணிர் விடுகின்றனர். அவ்வாறு பலகாலுஞ் செய்த பிறகு ஒவ்வொரு வேளைகளில் தம்மையும் அறியாமல் இறைவனிடம் வருத்தம் சினம் அன்று உண்டாகிறது. இறைவனை நோக்கியோ அன்றித் தம் அருகில் உள்ளாரை நோக்கியோ என் பிழைகளை மன்னித்து எனக்கு அருள் செய்யக் கூடாதா?’ என்று கேட்பர்.

“குன்றே அமைய குற்றங்கள் என்றே நீ

கொண்டால் என்தான் கெட்டது இரங்கிடாய் எண்தோள் முக்கண் - எம்மானே!”

(திருமுறை: 8, 33, 3).

என்றும் -

‘என்பிழைக்கே குழைந்து வேசறுவேனை

ண்டாய்”

(திருமுறை: 8, 6, 50) என்றும் மணிவாசகர் பேசுகின்றார். நம்மாழ்வார்

அகத்துறையில் கிளியைத் தூதுவிடும் சூழ்நிலையில் இதே கருத்தைப் பேசுகின்றார்.

+++++++