பக்கம்:அருளாளர்கள்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 107

என்று சொல்லுகின்ற பாடலிலே, இந்திரனுடைய ஆரத்தை உக்கிரகுமார பாண்டியன் வாங்கித் தரித்துக் கொண்டார் என்று திருவிளையாடலில் வருகிற கருத்தை, சிலப்பதிகாரத்திலே பேசுகிறார்.

இனி, இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் என்று பரஞ்சோதியார் சொல்வதையும் இளங்கோ வடிகள்

குறிப்பிடுகிறார்.

“முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்

றிடியுடைப் பெருமழை யெய்தா தேக”

(சிலம்பு : f, 26)

தங்களுடைய தலைவனாகிய இந்திரன் இருக்கிறானே, அவனுடைய தலையிலே வளையினால் அடித்துவிட்டான் இந்த உக்கிரகுமார பாண்டியன் என்று மேகங்கள் எல்லாம் கோபித்துக் கொண்டு, மழை பெய்யாமலேயே இருந்தனவாம். உடனே உக்கிரகுமாரன் அந்த மேகங்களை யெல்லாம் பிடித்து, சிறை செய்து, மழை பெய்யும்படிச் செய்தான்.

“மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கென :

(சிலம்பு : t29)

என்று சிலப்பதிகாரம் பேசுகிறது. ஆக, திருவிளையாடல் கதைகள் தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில் புதியனவல்ல என்பது நிச்சயமாகத் தெரிகிறது. -

அடுத்து, இந்திரன் பழி தீர்த்தது முதலான இருபது திருவிளையாடல்கள் கல்லாடத்திலும் காணப்படுகின்றன. கல்லாடத்தில் இடம் பெறுகின்றதென்றால், இரண்டாம் நூற்றாண்டைத் தாண்டி, ஏழு, எட்டு என்று கருதக் கூடிய பகுதிகளிலும் இருபது திருவிளையாடல்கள் பேசப் படுகின்றன. தேவாரத்திலும், திருவாசகத்திலும் பல