பக்கம்:அருளாளர்கள்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவிளையாடல்கள் பேசப்படுகின்றன என்பதிலே வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் வியக்கத்தகுந்த ஒரு காரியமும் உண்டு. நால்வர் பெருமக்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து, எத்தனையோ அரும்பெரும் பாடல்களை இயற்றியிருக் கிறார்கள். பின்னால் வந்த சோழர்கள் தேவாரப் பதிகங்கள் பாடுவதற்கு நிபந்தங்கள் விட்டு, எவ்வளவோ திருக்கோவில்களுக்குத் தொண்டு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தப் பெருமக்கள் வாழ்ந்த காலத்திலே, இவர்கள் ஆற்றிய செயல்களைப் பற்றி கல்வெட்டிலே குறிப்பு ஒன்றும் கிடையாது என்பது உண்மை. எல்லாக் கல்வெட்டுகளும் இன்று கிடைக்கவில்லை. ஆகையால் மறைந்திருக்கலாமென்று நினைப்பதிலும் தவறில்லை. ஒன்று மட்டும் உறுதி. தளவாய்புரம் செப்பேடுகள் என்று 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டன. அந்தத் தளவாய்புரம் செப்பேடுகளில், மாணிக்க வாசகருடைய காலத்தை உறுதி செய்யக் கூடிய பல சான்றுகள் அதிலே உண்டு. இரண்டாவது வரகுணன் காலத்திலே கொடுக்கப்பட்ட செப்பேடுகள் அவை. அவனுடைய தம்பியாகிய அவனி நாராயணன் என்பவன் ஆட்சி செய்கிறான். அந்தத் தளவாய்புரம் செப்பேட்டில் திருவிளையாடல் குறிக்கப்பட்டிருக்கிறது. 98-வது வரியிலே, இந்திரன் மாலை அணிந்தது; இந்திரன் முடிமேல் வளை எறிந்தது; சங்கம் நிறுவியது ஆகிய மூன்று திருவிளையாடல்கள் பேசப்படுகின்றன என்றால் திருவிளையாடலைப் பொறுத்த மட்டிலே, இந்த நாட்டிலே சிலப்பதிகாரத்திலிருந்து பிற்காலம் வரையில் பலருடைய கவனத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. . -

சங்கம் வளர்த்த மதுரை: தமிழ் வளர்த்த மதுரை; தமிழ்ச் சொக்கன் என்றே எல்லாப் புலவர்களாலும் பாடப்படுகின்ற சிறப்பு வாய்ந்தவர் சொக்கலிங்கப்