பக்கம்:அருளாளர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 * அருளாளர்கள்



பாடுகிறார். இதில், மற்ற நூல்களில் இல்லாத புதுமை என்னவென்றால் 'சைவர்கள் வீதி’ என்ற ஒன்றைப் பாடுவார். வணிகர், வேளாளர், அரசர், அந்தணர் என்று பாடுவது மரபு. சைவர்கள் வீதி என்ற ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கே எப்போது பார்த்தாலும் பூசையி னுடைய குரல் கேட்கிறதென்று சொல்லுவது புதுமை. அதற்குமேல், வேளாளர்கள் எப்படி தாங்கள் விளை விக்கின்றப் பொருள்களைப் பயன்படுத்துகிறார்களென் பதையும் ஒரு நுணுக்கத்தோடு பேசுகிறார். வள்ளுவன் இதைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் -

            தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை" 
                  (குறள்-43)

இது நம்முடைய சட்டம். தமிழர்களைப் பொறுத்த மட்டில், வேளாளன் என்பவன் இந்த ஐந்து பேரையும் உபசரிக்கக் கடப்பாடு உடையவன். இது வள்ளுவன் காலத்துச் சட்டம். ஏறத்தாழ 1500 ஆண்டுகள் கழித்து வருகிறார் பரஞ்சோதியார். அப்போது காலம் மாறிவிட்டது. ஆகவே, அதற்கேற்ப சில திருத்தங்களைச் செய்கிறார். மதுரையில் இருக்கிற வேளாளர்கள் என்ன செய்கிறார்களாம்? “தெய்வம், அற்றவர்க்கு அற்றவாறு ஈந்து"- என்று இரண்டு அதிகமாகச் சேர்க்கிறார். ஊர்த் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் பின்னே வருகிறதே “தென் புலத்தார் தெய்வம்" என்று. அங்கே ஒரு தெய்வம் வருகிறதே என்றால் நாம் இந்த வேறுபாட்டைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். பொதுவாக மக்கள் ஒரு தெய்வத்தை வழிபடுவது மரபு. அந்தந்த இனத்தார்கள் தங்களுக்கு உரிய கடவுளை அல்லாமல் எந்த ஊரில் குடியிருக்கிறார்களோ அந்த ஊர்க் காவல் தேவதையையும் பொதுவாக வணங்குவார்கள். இப்போதுகூட ஊர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/123&oldid=1291874" இலிருந்து மீள்விக்கப்பட்டது