பக்கம்:அருளாளர்கள்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 113

காவல் தெய்வம் என்று தமிழ் நாட்டு கிராமங்களிலே காணலாம். வேளாளர்கள் எந்த தெய்வத்தை வழிபடுபவர் களாக இருந்தாலும் - சைவர்களோ, வைணவர்களோ, ஜைனர்களோ - கிராம தேவதையைப் பொறுத்த மட்டில் பொதுவாக ஒன்றாக இருப்பார்கள். அந்த நுணுக்கத்தில் சொல்கிறார், “ஊர்க் காணித் தெய்வம் அற்றவர்க்கு ஈந்து’’ என்று. மேலும் ஒரு கூட்டத்தார் உண்டு. வள்ளுவன் சொன்னதில் இது வரவில்லை. “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்’ - இந்த ஐந்திலும் வராத ஒரு கூட்டம் இருக்கிறது. அது பிச்சைக்கார கூட்டம். அதை வள்ளுவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே சொல்லவில்லை. இங்கே என்ன சொல்கிறார், பரஞ்சோதியார், உற்றவர், சுற்றம், தெய்வம், விருந்தினர்க்கு ஊட்டி உண்பார். இதிலே திருக்குறளைப் பேசிவிட்டார். உற்றவர், சுற்றம், தெய்வம், விருந்தினர், இட்டு உண்பார்’ என்றால் தான்’ ஆக ஐந்து பேரையும் சொல்லி விட்டார். அப்படியானால் பிச்சைக் காரர்களைப் பற்றி எங்கே பேசுகிறார்: “அற்றவர்க்கு அற்றவாறு ஈந்து’’-ஒன்றுமே இல்லாத பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கும் கொடுத்த பிறகு, “கொற்றவர் கடமை கொள்ள” - அரசனுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்திவிட்டு “பண்டியிலே கொண்டு போய்’-வண்டியிலே சரக்கை ஏற்றி விட்டிற்குக் கொண்டு போய், “தென்னாடுற்றவர், சுற்றம், தெய்வம், விருந்தினர்க்கு’க் கொடுக்க வேண்டு மென்று பேசுகிறார். தர்மத்தைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன், அதை எந்தெந்த வகையில் குறைப்பதென்ற எண்ணம் ஊடாடிக் கொண்டே இருக்கும். “ஊர்க் காணித் தெய்வம், அற்றவர்க்கு அற்றவாறு ஈந்து’ - இதை ஐந்தாகப் பிரித்து விட்டு, ஐந்திலே ஒரு பாகத்தை தர்மமாகச் செய்யவேண்டும் என்று நினைத்தார் போலும்.