பக்கம்:அருளாளர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 * அருளாளர்கள்



ஊர்க் காவல் தெய்வத்திற்கும், பிச்சைக்காரர்களுக்கும் முதலில் கொடுத்துவிட வேண்டும். “அளவை கொண்டு” - அளக்கிறதுக்கு முன்னாலே அதைக் கொடுத்துவிட வேண்டுமென்று சொன்னார். ஏனென்றால் அளந்துவிட்ட பிற்பாடு, அது நூறு என்று வந்துவிட்டால் குறைக்க மனம் வராது. ஆகவே மனித மனோதத்துவத்தை அடிப் படையிலே வைத்து, நூறு என்று கண்டதற்குப் பிறகு கொடுக்க உனக்கு மனம் வராது. ஆதலால், முதலிலேயே கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிடு, பிறகு கணக்குப் போடு என்று கூறினார். இது வேளாளர்களுடைய வாழ்க்கை முறை. ஆனால் ஒரு பக்திநூல் பாட வருகின்றவர் அடியார்களை உபசரித்தார்கள் என்று சொல்ல வேண்டும். அது மிகப் பொருத்தமானது. எப்படி அடியார்களை மதுரையம்பதியினர் உபசரிக்கிறார்கள்,

“நிச்சலு மீச னன்பர் நெறிப்படிற் சிறார்மேல் வைத்த பொச்சமி லன்பு மன்னர் புதல்வரைக் கண்டா லன்ன” (திருவிளை. திருநா: 31)

“நிச்சலு மீச னன்பர் நெறிப்படிற்’- தினந்தோறும் அடியார்கள் வந்தால் - ஏன் தினந்தோறும் என்று சொல்கிறார்? சிறந்த முறையிலேே செய்கிறவன் ஒரு நாள் செய்வான், இரண்டு நாள் செய்வான், சில நாட்கள் செய்வான்; பல நாட்கள் செய்வான், அப்புறம் வெறுப்பு அடைந்து விடுவான். “நிச்சலும்’ என்று சொல்வதினாலே, தினமும் செய்ய வேண்டிய 495L%T}Lf) என்று நினைவூட்டுகிறார். “சிறார் மேல் வைத்த சொச்சமி லன்பு மன்னர் புதல்வரைக் கண்டா லன்ன அச்சமுங் கொண்டு’ - அடியார்களை எப்படி வரவேற்க வேண்டுமாம் - எல்லை யில்லாத அன்பும் இருக்க வேண்டும்; Fomilidrify breeds contempt என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/125&oldid=1291717" இலிருந்து மீள்விக்கப்பட்டது