பக்கம்:அருளாளர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 115

சொல்லுவார்களே - அளவுக்கு மீறி நெருங்கிவிட்டால் கெளரவக் குறைவு வந்து விடும். அதுவும் கூடாது. எல்லையற்ற அன்பும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எல்லையற்ற மரியாதையும் இருக்க வேண்டும். இவை இரண்டுக்கும் உவமை கூட்டிச் சொல்கிறார். சிறார் மேல் வைத்த அன்பு - குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோமோ அவ்வளவு அன்புடன் அடியார் களைக் கூப்பிட்டு உபசரிக்க வேண்டும்; அதே நேரத்தில் “மன்னர் புதல்வரைக் கண்டா லன்ன அச்சமும்’ராஜா பிள்ளையைக் கண்டால் எவ்வளவு பயபக்தியோடு நெருங்குவோமோ அது போல் அடியார்களை நெருங்கி உபசரிக்க வேண்டுமென்று சொல்லுகிறார். ஆக இந்தக் கருத்தை சேக்கிழாரிடமிருந்து வாங்குகிறாரென்று நினைக்க வேண்டியிருக்கிறது. இளையான்குடிமாறனார் வரலாற்றைச் சொல்ல வந்த சேக்கிழார் சொல்லுவார். “ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் எனபது ஒா தனமையால நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் கூர வந்துஎதிர் கொண்டு கைகள் குவித்து நின்றுசெ விப்புலத்து ஈரம் மென்மது ரப்ப தம் பரிவு எய்த முன்உரை செய்தபின்’.

                (பெயு-442)

என்று சொல்லுவார். தெருவில் யார் வந்தாலும் அடியார் என்று ஏற்றுக்கொண்டு, எல்லையில்லாத மரியாதையோடு அவர்களை உபசரிக்க வேண்டு மென்று சேக்கிழார் சொல்லுவார். “கொண்டு வந்து மனை புகுந்து, குலாவு பாதம் விளக்கி, மண்டு காதல் ஆசனத்திடை வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/126&oldid=1291724" இலிருந்து மீள்விக்கப்பட்டது