பக்கம்:அருளாளர்கள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 117

கால்-சந்தனத் தோட்டத்திலிருது, பொதிக மலையிலிருந்து வருகின்ற தென்றல் காற்று இருக்கிறதே, அது “முகத்திடை வீசி மடுக்கவும்” - அவனுடைய முகத்திலே வீசி, அந்தக் களைப்புப் போக்குவதற்கும், -

“தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ”

தமிழைத் தன்னுடைய காதிலே கேட்க வேண்டு மென்பதற்காகத்தான் தென் திசை நோக்கி ஆடுகிறான் என்று சொல்கிறார்.

இதற்கு மேலே வடமொழி வல்லாளராகிய இவருக்கு இருந்த தமிழ்ப் பற்றினைக் காண்பதற்கு சில இடங்கள்.

“கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து

பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை ”

(திருவிளை: திருநா. 57)

என்று சொல்லுவார். சிவபெருமானே சங்கப் புலவர் களுள் ஒருவராக வந்திருந்து, சங்கப் புலவர்களோடு தமிழ் ஆராய்ந்தானே அதைப் பேசுகிறார்.

“தொண்டர் நாதனைத் துதிடை விடுத்தது முதலை

உண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண்

ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்”

(திருவிளை: திருநா. 58)

இந்த அற்புதங்களையெல்லாம் இயற்றியது தமிழ்ச் சொல் என்று நினைக்கிறீர்களா அல்லது வேறுசொல் என்று நினைக்கிறீர்களா என்று கேட்பதிலிருந்து அவர் தமிழ் மாட்டு கொண்ட அளப்பறிய காதலை அறிய முடிகிறது. இனி பல படிகள் மேலே செல்கிறது அந்தத் தமிழன்பு.