பக்கம்:அருளாளர்கள்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 121

சொல்லுகின்றன என்று பேசுவார் ஞானசம்பந்தப் பெருமான். தேவாரத்தில் நன்கு ஊறித் திளைத்த பரஞ்சோதியார் இதை எடுத்து பேசுகிறார்.

“ஆலவா யுடையா னென்று மங்கையற் கண்ணி

யென்றுஞ் சோலைவாழ் குயிலினல்லார் சொல்லியாங்

கொருங்கு சொல்லும் பாலவாங் கிளிகள் பூவை பன்முறை குரவ னோதும் நூலவாய்ச் சந்தை கூட்டி நுவன்மறைச் சிறாரை

- யொத்த’ (திருவிளை. திருநக, 51)

பாட்டை இரண்டாகப் பிரித்தார். கிளிகள் ஒன்று சொல்லுகின்றன. பூவை என்று சொல்லக்கூடிய மைனாக்கள் ஒன்று சொல்லுகின்றன. கிளிகள், “ஆலவா யுடையா னென்று அங்கயற் கண்ணி யென்றுஞ்’ என்று பேசுகின்றன. அதை எங்கு கற்றுக் கொண்டன : “குயிலி னல்லார் சொல்லியாங் கொருங்கு சொல்லும்”. பெண்கள் வேத அத்யயனம் செய்வதில்லை. இறைவனுடைய பெயரைத்தான் சொல்லுவார்கள். ஆகவே, கிளிகள் அவர்களோடு நெருங்கிப் பழகுவதால், அதைச் சொல்லிற் றாம். மைனாக்கள் இருக்கின்றனவே, அவை வெளியில் இருக்கின்றன. “பன்முறை குரவ னோதும் நூலவாய்’-- பலமுறை வேதத்தைச் சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியன் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு சிறார்கள் என்ன செய்கிறார்கள்? “சந்தை கூட்டி நுவன் மறை’- சந்தஸ் என்று சொல்லுவார்கள். வேதம் சொல்வதை சந்தஸ்’ சொல்வது என்று சொல்லுவார்கள். ஒலிக் குறிப்பு மாறாமல் சிறார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதைக் கேட்டுக் கொண்டேயிருந்த மைனாக்கள் வேதம் சொல்ல ஆரம்பித்துவிட்டதாம். .

9