பக்கம்:அருளாளர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 123

இருந்தினி தருந்தா நிற்க'-வந்த வருத்தம் தீர சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்களே அவர்கள் இருந்தினி தருந்தா நிற்க - எல்லா விதமான உபசாரங்களும் செய்யப்பட்ட காரணத்தால், அவர்கள் சந்தோஷமாக இருந்து சாப்பிட: “இன்னமு தட்டுப் பின்னும் விருந்தினர் வரவு நோக்கி” - இன்னும் விருந்தாளிகள் வர வேண்டுமென்று பார்க்கிறார் களாம். எப்படிப் பார்க்கிறார்கள்? வெறுப்போடு பார்க்கிறார்களா? கவலையோடு பார்க்கிறார்களா? இவர் சொல்கிறார்,”.வித்தெல்லாம் வயலில் வீசிவருந்தி விண் ளுேக்குமோரே ருழவர்போல் வாடிநிற்பார்” ஒர் ஏர் உழவன் (சிறிய விவசாயி) தங்களிடமிருந்த நெல்லை யெல்லாம் வயலில் வீசி விட்டான். மழை வந்தால் தான் பயிர் பிழைக்கும். எவ்வளவு ஆர்வத்தோடு மழையை எதிர் பார்ப்பானோ அதைப் போல் விருந்தினர்களை எதிர் பார்க்கிறார்கள் என்று சொல்லும்போது, திருக்குறளுக்குப் பொன்னாலே உரையிட்டு, வைரத்தை இழைத்து விடுகிறான் பரஞ்சோதி,

“ஓர் ஏர் உழவன்” என்பது சங்க காலத்துச் சொல். இதில் என்ன சிறப்பு: நூறு ஏக்கர் இருந்தால் சிலது விளையலாம்; சிலது விளையாமல் போகலாம். கவலைப் பட மாட்டான். உள்ளதே ஒரேயொரு ஏர் உழக்கூடிய நிலம். அதிலும் கையில் இருந்த நெல்லையெல்லாம் வித்தாக வீசிவிட்டான். அவன் எவ்வளவு ஆர்வத்தோடு மழையை எதிர் பார்க்கிறானோ, அவ்வளவு ஆவலோடு இவர்கள் விருந்தினர்களை எதிர்பார்க்கிறார்கள் என்று பேசுகிறார் பரஞ்சோதியார்.

இனி, திருவிளையாடலின் அடிப்படையைக் கொஞ்சம் காணல் வேண்டும். இறைவனுடைய பெருமை, உயிர்களினுடைய சிறுமை, உயிர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு முதலியவற்றை நம்முடைய பெருமக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/134&oldid=659453" இலிருந்து மீள்விக்கப்பட்டது