பக்கம்:அருளாளர்கள்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 * அருளாளர்கள்



அறிந்ததுபோல், உலகத்திலே பிற பகுதிகளிலேயுள்ளவர்கள் அறிவார்களென்று சொல்வதற்கில்லை. மிகமிக உயர்ந்த தாய், “உயர்வர உயர்நலம் உடையவன்’ என்று ஆழ்வார் சொல்வது போல, ஒப்பு உயர்வு இல்லாத அளவுக்கு உயர்ந்து நிற்கிற பரம்பொருள். அவனை நோக்கி உயிர்களாக இருக்கிற நாம் இறப்ப இழிந்தவர்கள். ஆனால் இறைவனுக்குள்ள தனிச் சிறப்பு என்று இந்த நாட்டவர் என்ன கூறுகிறார்களென்றால், இவ்வளவு உயர்ந்திருக்கிற பொருள், இவ்வளவு இழிந்த உயிர்களிடம் கருணை மேற் கொண்டு, வந்து அருள் செய்வதைத் தான். அதைத்தான் இந்த நாட்டுக்காரர்கள் போற்றினார்கள். அந்த நுணுக் கத்தைத் தத்துவ ரீதியாகவும் பேசியிருக்கிறார்கள்; வரலாற்று ரீதியாகவும் பேசியிருக்கிறார்கள்; கதைகளாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

தத்துவ ரீதியாகச் சொன்ன பகுதிகளைப் பார்ப் போமேயானால் மெய்கண்டாருடைய சிவஞான போதம் போன்ற நூல்களில் பார்க்கலாம். இறைவன் உயிர்கள் மாட்டு கருணை கொண்டு இறங்கி வந்து செய்கின்ற சிறப்பை இனி வரலாற்று ரீதியிலே பார்ப்போம், மாணிக்கவாசகப் பெருமான் தம்முடைய திருவாசகத்திலும், தேவாரம் பாடியவர்கள் அவர்கள் பாடலிலும் அவரவர்கள் வாழ்க்கையில் இறைவன் எவ்வளவு இரங்கி வந்து, பரம கருணையோடு அவர்களை ஆட்கொண்டான் என்பதை வரலாற்று அடிப்படையில் பேசி உள்ளனர். இனி கதை அடிப்படையிலும் இதைச் சொன்னார்கள். அதற்கு முதலிடம் தருவதுதான் திருவிளையாடல். அதில் வருகின்ற பகுதிகளைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்தது ஒரு திருவிளையாடல். தாய்ப் பன்றியை மன்னன் வேட்டையாடிக் கொன்றுவிட்டான். பன்றிக்