பக்கம்:அருளாளர்கள்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 * அருளாளர்கள்


அனைவருக்கும் இறைவன் அருள் செய்கிறான். ஆனால் எல்லாவற்றின் அடிப்படையிலும் ஒன்றைக் காணமுடியும். வேறு துணை இல்லாதபோது, நீயே சரணம் என்று இறைவனிடத்தில் முறையிடும் போது, ஆண்டவன் துணை புரிகிறான். அதை வரிசையாக காட்டிக்கொண்டே செல்வார்.

இடைக்காடன் என்ற மிகச் சிறந்த புலவன் அற்புதமாகப் பாடல் இயற்றினான். தமிழறிந்த பாண்டியனிடத்தில் சென்று அவற்றைக் காட்டினான். அந்தப் பாண்டியன் என்ன காரணத்தாலோ அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டான். விட்டது மட்டுமல்ல. கொஞ்சம் பொறாமை இருந்திருக்க வேண்டும் அவனுக்கு. அது வித்வத்காய்ச்சல் என்று சொல்லுகிறோமே அந்த முறையிலே, அலட்சியமாக இருந்துவிட்டான். இடைக் காடனுக்குக் கோபம். புலவன் என்று நினைத்தவுடன் எதைச் சொன்னாலும் வாங்கித் தோளில் போட்டுக் கொண்டு, கொடுக்கின்ற பரிசிலுக்குக் காத்துக் கொண்டிருப்பான் என்று நினைப்பது தவறு. சங்க காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள், “ஈதலோ எளிது வரிசை அறிதலோ பெரிது’ பெறுவதற்கு ஆசைப் படுபவர்கள் அல்ல நாங்கள், எங்களுடைய பெருமை அறிந்து எங்களை உபசரிக்க வேண்டும். ஆகவே பாண்டியன் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தவுடன், இடைக்காடனுக்கு எல்லையில்லாத கோபம் உண்டாயிற்று. நேரே சொக்கலிங்கப் பெருமானிடத்திடம் வந்தான். தான் எழுதிய கவிதைகளை அவன் முன்னால் தூக்கி எறிகிறான்.-ஆண்டவனிடத்தில் சொல்கிறான்,

“என்னையிகழ்ந் தனனோசொல் வடிவாய்நின்

இடம்பிரியா இமையப் பாவை