பக்கம்:அருளாளர்கள்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 127

தன்னையுஞ்சொற் பொருளான வுன்னையுமே

யிகழ்ந்தனனென் றனக்கியா தென்னா’

           (திருவிளை: 56.10)

ஐயனே! நீ ஆட்சி செய்கின்ற இந்த ஊரில் உள்ள பாண்டியன் தமிழ் அறிவு மிக்கவனென்று நினைத்து சென்று பாடினேன். அவன் கவனிக்கவில்லை; அவன் கவனிக்கவில்லை என்றால் எனக்கு என்ன கெளரவக் குறைவு; அவன் என்னையா கெளரவிக்கவில்லை? தமிழ்ப் பாட்டை அலட்சியம் செய்தான்; தமிழ்ப் பாட்டை அலட்சியம் செய்வது என்றால் என்ன? இரண்டுதான் அலட்சியமாக இருக்க முடியும். ஒன்று சொல் நன்றாக இல்லை என்று வெறுப்பு காட்டலாம்; அல்லது சொற் பொருள் சரியாக இல்லையென்று வெறுப்புக் காட்டலாம்; இரண்டிலே எதைக் காட்டியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; உன்னைத்தான் என்று சோமசுந்தரப் பெருமானைச் சுட்டுகிறான். இடக்காடன், “என்னை இகழ்ந்தனனோ? என்னையா அவமானம் பண்ணினான்! இல்லை. “சொல் வடிவாய் நின் இடம் பிரியா இமையப்பாவை தன்னையும் செஞ்சொற் பொருளான உன்னையுமே” - சொல்லே வடிவமாக இருக்கிறாள் உமாதேவி. சொல்மேல் அவன் குற்றம் சொல்லியிருந்தால் சொல் வடிவான அங்கையற் கண்ணியைத்தான் குற்றம் சொல்லியிருக்க வேண்டும், “சொற்பொருளான வுன்னையுமே இகழ்ந்தனன்’’. சொல்லுக்குப் பொருளாக நிற்கும் உன்னையே இகழ்ந்தனன். காளிதாசன் ரகுவம்சத்தில் “வாக்கார்த்த’ என்ற, கடவுள் வாழ்த்துடன் தொடங்குவான், சொல்லும் பொருளுமாக இருக்கிற உமா காந்தனை வணங்குகிறேன் என்று. அந்தப் பாடலுக்கு விளக்கம் தருவதுபோல் இங்கே இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலத்திலே சொல்வான். ஓர் உண்மையான