பக்கம்:அருளாளர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 * அருளாளர்கள்


பக்தனாகிய இவன் நினைக்கிறான். எனக்கு உடம்பு வலித்தால் இறைவனுக்கும் உடம்பு வலிக்கத்தானே செய்யும். ஆகவே 'மாறுக’ என்றான். கண்ணப்பருடைய அன்பைப்போல இது ஒரு அன்பாகும். ஆக கால் மாறி ஆடிய திருவிளையாடலில் எதனைக் காண முடிகிற தென்றால் பக்தனாக இருக்கிறவர்கள் பரம்பொருளை எந்த அளவுக்கு தங்களுக்கு ஏற்ற பொருளாக ஆக்கிக் கொண்டு, அவர்களோடு உறவு கொள்கிறார்கள் என்பதையும், திருவிளையாடல் புராணத்தில் காட்டுகிறார்.

கடம்ப மரம் மதுரைக்கு உரியது. அந்தக் கடம்ப மரம் இறைவனுக்குப் பூசை செய்கிறதென்ற கற்பனை பேசுகிறார். இந்திரன் மதுரைக்கு வந்து சொக்கலிங்கப் பெருமானை வழிபடுகிறான். அவன் எப்படி வழிபடு கிறானோ அதைப்போல் இந்த மரம் வழிபட்டதாம்.

“சுரந்து தேன்றுளித் தலர்களுஞ் சொரிந்துவண் டரற்ற

நிரந்து சுந்தரற் கொருசிறை நின்றபூங் கடம்பு பரந்து கட்புன லுகப்பல மலர்கடுய்ப் பழிச்சி இரந்து னிற்றாச் சனைசெயு மிந்திர னிகரும்"

தேன் துளிர்க்கின்றது. அதற்கு மேலே மலர்களைச் சொரிகின்றது. வண்டுகள் சப்தம் செய்கின்றன. ஆகவே இது பூத்திருக்கிற மரத்தின் இயல்பான செயல்கள். அதற்குமேலே ஒரு படி போகிறார். இரவெல்லாம் பனி பெய்வதால், காலையில் மரங்களிலிருந்து தண்ணிர் சொட்டு சொட்டாக விழும். அது கண்ணிரை விடுவது போல் இருக்கிறதாம்.

“பல மலர்கடுய்ப் பழிச்சி இரந்து நின்றருச் சனை செய்யும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/141&oldid=1291885" இலிருந்து மீள்விக்கப்பட்டது