பக்கம்:அருளாளர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 * அருளாளர்கள்



உனக்கும் இதற்கும் லாயக்கில்லை என்று அனுப்பி விட்டார்’ என்று சொன்னான். ஆகவே தள்ளப்பட்ட சீடன் தேவ காந்தாரியை இப்படிப் பாடினான் என்றால் ஏற்றுக் கொண்ட சீடர்கள் என்னமாய்ப் பாடுவார் களென்று நினைத்து அன்று இரவே ஒருவரிடமும் சொல்லாமல் ஊரை விட்டுப் போய் விட்டான். அது விறகு விற்ற படலம். இதில் அவருடைய இசை அறிவு புலப்படுகிறது. எப்படிப் பாடக் கூடாதென்பதற்கு இலக்கணம் சொல்கிறார்.

“வயிறதுகுழிய வாங்க லழுமுகங் காட்டல் வாங்குஞ் செயிரறு புருவமேறல் சிரநடுக் குறல்கண் ணுடல் பயிரரு மிடறு வீங்கல் பையென வாயங் காத்தல் எயிறது காட்டலின்ன உடற்றொழிற் குற்றமென்”

       (திருவிளை: 41, 29)

பாடும்போது வயிறு ஒன்றோடு ஒன்று ஒட்டி முதுகு எலும்பு வரையில் வயிறு போய்விடக்கூடாது; “அழுமுகம் காட்டல்’ - இந்தப் பாடலைப் படிக்கும் போது நம்முடைய கற்பனையில் எத்தனையோ நினைவுக்கு வருகின்றன, அழுமுகம் காட்டல்; “வாங்கும் சீற புருவம்

ஏறல்’ - புருவம் மேலே ஏறக்கூடாதாம்; - “சிரம் நடுக்குறல்’ - தலை நடுங்கக்கூடாது; “கண் ஆடல்’ - கண் இந்தண்டை அந்தண்டை போகக்கூடாது; “பயிரரு--------- விங்கல்” நாதசுரம் வாசிக்கிற மாதிரி

தொண்டை வீங்கக் கூடாது; “பையென வாய் காத்தல்” - சுருக்குப் பை திறந்ததுபோல் வாய் அங்காத்தல்; “ஈறது காட்டல்’ -பல் வெளியில் தெரியக்கூடாது, “இனி உடல் தொழிற் குற்றம்’ - இவையெல்லாம் உடலில் ஏற்படும் குற்றங்கள் இசைப் புலவனுக்கு. இனிமேல் இசையிலுள்ள குற்றங்களைச் சொல்கிறார். வெள்ளை இசை, பேய்க் குரல், கட்டைக் குரல், வெடிக் குரல், மூக்கினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/145&oldid=1291864" இலிருந்து மீள்விக்கப்பட்டது