திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 137
உதித்தால் எனக்கென்ன என்று கவலையில்லாமல் இருந்தேன்; “மட்டுநின்----- ஐய” இன்றைக்கு இந்த இடையூறு வந்துவிட்டது என்று முறையிடுகிறாள். இத்தனைக் காலம் உன் திருவருளால் வாழ்ந்தேன், ஆனால் இன்று இடையூறு வந்து விட்டது. அதுவும் யாரால் ? மன்னவன் ஆணையால், பாண்டியன் ஆணையாலே ஒரு பெரும் துயரம் வந்து விட்டது என்றால் அதற்குமேலே ஒரு படி போகிறார்.
“துணையின்றி மக்கள்இன்றித் தமரின்றிச் சுற்றமாகும் பணையின்றி யேன்று கொள்வார் பிறரின்றிப் பற்றுக்
கோடாம்
புணையின்றித் துன்பத் தாழ்ந்து புலம்புறு பாவி
யேற்கின்
றிணையின்றி யிந்தத் துன்ப மெய்துவ தறனோ
வெந்தாய்” (திருவிளை:61,12)
துணையில்லை; மக்களில்லை; தமரில்லை; சுற்றமில்லை. தமர் என்றால் சுற்றமென்று பொருள் சொல்லிவிடுவோம். தமர் வேறு, சுற்றம் வேறு. சுற்றம் கொஞ்சம் நெருங்கியவர்; தமர் அதிக துரத்திலுள்ள சுற்றத்தார்கள்.
நான் போனால் என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் கூட ஒருவரும் இல்லை ஐயா. அனாதி என்ற ஒரு சொல் உண்டு என்றால் - அனாதை என்ற அந்தச் சொல்லுக்கு நேர் பொருள் நான்தான்; பற்றுக் கோடாக ஒரு துணையும் இல்லை; இவ்வளவு பெரிய துன்பம் வருவது முறையோ என்று வருந்துகிறாள். அப்படி ஒரு அன்பர் வருந்தினால் இறைவன் பொறுத்துக் கொள்ள முடியாதல்லவா? ஆகவே, சொக்கநாதப் பெருமான் தனிக் கூலி ஆளாக வருகிறான். அப்படி வருகின்றபோது,
1O