பக்கம்:அருளாளர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 * அருளாளர்கள்



எனக்குக் கூலி கொடுத்து, வேலை தருகிறவர் எங்கே என்று கேட்டுக்கொண்டே வருகிறான். ஆகவே வேலை இல்லாத் திண்டாட்டம் சோமசுந்தரப் பெருமான் காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் போல் இருக்கிறது. அப்படி வந்தபோது எல்லையில்லாத சந்தோஷம் பிட்டு வாணிச்சிக்கு அவள் சொன்னாள், இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமேயானால் அது சொக்கநாதப் பெருமானின் திருவிளையாடல்தான். இங்கே வா என்று அழைத்தாள். எனக்கு இப்போது ஆள் தேவை என்றாள். உடனே கேட்டான் அந்தப் பெருமகன், வேலை செய்வதிலே அட்டியில்லை, கூலி என்ன?’ என்று. என்னுடைய வாழ்க்கையிலே இதைத் தவிர வேற ஒன்றும் சொத்து இல்லை. பிட்டுதான் கிடைக்கும் என்று சொன்னாள். அடியார்களின் அன்பதையும் சேர்த்து உண்பவனாகிய பெருமான், இதை விடச் சிறந்த கூலி வேறு எதுவும் கிடையாது; ஆகவே முன்னூட்டு என்று சொல்கிறோமே (அட்வான்ஸ் பேமெண்ட்), வேலைக்குப் போவதற்கு முன் பிட்டு இடு என்று சொன்னான். உதிர்ந்த பிட்டாகக் கேட்டானாம். பாவம், அன்று சுட்ட பிட்டெல்லாம் உதிர்ந்து விட்டது. எல்லாவற்றையும் வாங்கித் துணியிலே கட்டிக் கொண்டான். “அழுக்கடைந்த பழந்துணி’ என்று சொல்வான். அதிலே கட்டிக் கொண்டு, சுடச்சுட வாயிலே போட்டுக் கொண்டான். உலகியல் அறிந்த அற்புதமான முறையிலே புலவன் பேசுவான். சுடச்சுட வாயிலே போட்டால், இன்றைக்குக் கூட இந்தப் பக்கக் கன்னத்திலேயும் அந்தப் பக்கக் கன்னத்திலேயும் பிரட்டிவிட்டு சூட்டைப் போக்குவோம். அதுபோல சூட்டைப் போக்கினானாம். உண்டான். பிறகு வேலை செய்யப் போனான். பதிந்துவிட்டான் ஏட்டிலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/149&oldid=1291881" இலிருந்து மீள்விக்கப்பட்டது