பக்கம்:அருளாளர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 139

வந்தியின் ஆள் என்று. வேலை செய்கிற லட்சணத்தைப் பாடுகிறார்.

“வெட்டுவார் மண்ணைமுடி மேல்வைப்பார் பாரமெனக் கொட்டுவார் .

மண்ணை வெட்டினான்; தலையிலே தூக்கி வைத்தான்; சே! இவ்வளவு பாரத்தை யார் தூக்குவதென்று அங்கேயே கீழே கொட்டுவான்; குறைத் தெடுத்துக் கொடுபோவார் சுமடுவிழத் தட்டுவார் சுமையிறக்கி யெடுத்ததனைத் தலைபடியக் கட்டுவார் உடன்சுமந்து கொடுபோவார்

கரைசொரிவார்’ (திருவிளை , 6126)

பாதிமண்ணைக் கீழே கொட்டிவிட்டு, பாதியை அள்ளிக் கிட்டுப் போனான். அந்த மண்ணை வெள்ளத்திலே கொட்டும்போது தலையிலே இருக்கிற சிம்மாட்டையும் சேர்த்துக் கொட்டுவான்; மறுபடியும் அந்தச் சிம்மாட்டைக் கட்டுகிறேன் என்று பொழுதை ஒட்டுவானாம்; மறுபடியும் சிம்மாட்டை வெள்ளத்திலே விட்டு விடுவானாம். ஐயய்யோ என் சிம்மாடு வீழ்ந்துவிட்டதே என்று சொல்லி, அந்த வெள்ளத்தில் விழுந்து, நீந்திச் சிம்மாட்டை எடுத்து வருவானாம். இந்த மாதிரி வந்தவுடன் களைப்பு அதிகமாகி விட்டது என்று,

“குருமேவு மதிமுடியைக் கூடையனை மேற்கிடத்தி வருமேரு வனையார்தம் வடிவுணர்ந்து துயில்கின்றார்’ (திருவிளை : 6128)

ரொம்ப களைச்சுப் போச்சு; தூங்கப் போகிறேன் என்று கூடையைத் தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கிவிட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/150&oldid=1291866" இலிருந்து மீள்விக்கப்பட்டது