பக்கம்:அருளாளர்கள்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 அருளாளர்கள்

என்று சொல்லுவார். நகைச்சுவை பொருந்தவும் இறைவனுடைய திருவிளையாடலைச் சொல்லிக் கொண்டு வருவார். அதன் இறுதிப் பகுதியில் மிக அற்புதமாகப் பேசுவார், ஒரு மனோ தத்துவத்தை வைத்து.

பாண்டியன் வந்தான். ஏன் இந்தப் பங்கு அடைக்கப் படவில்லை என்று கேட்டான். உடன் இருந்தவர்கள், இது வந்தியினுடைய பங்கு, ஒரு கூலிக்காரன் வந்து இப்படி தடித்தனமாக பொழுது போக்குகிறான் என்று சொன்னார்கள். அப்போது அற்புதமாகப் பேசுவான்,

“வந்திக்குக் கூலி யாளாய் வந்தவன் யாரென் றோடிக் கந்தர்ப்பன் எனநேர் நின்ற காளையை நோக்கியேடா’ (திருவிளை 614)

என்றானாம்.

அவன் நிற்கிறான். மன்மதன் போல் இருக்கிறான். பாண்டியனுக்குக்கூட டேய்’ என்று சொல்ல மனம் வரவில்லை. ஆனால் சொல்லி விட்டான். என்ன செய்தான்.

“ . . . . . யேடா அந்தப்பங் குள்ள வெல்லாமடைபட்ட தெவனி

- - - - யின்னம் இந்தப்பங் கடையாய் வாளா திருத்தியா றம்பீ

யென்றார்: (திருவிளை 614)

என்றானாம். டேய் என்று ஆரம்பித்து தம்பி என்று முடித்தால், டேய் என்று ஆரம்பித்த கொடுமையே போய்விடுகிறது. ஆகவே, இறைவனை இறைவன் என்று