பக்கம்:அருளாளர்கள்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 அருளாளர்கள்

களையே குறிக்கின்றார் என்பது வெளிப்படை. அது சூரிய காயத்ரி என்று பெயர் பெற்றிருப்பினும், அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ என்று நாவரசர் குறிப்பிடு வதைப் பார்த்தால் கதிரவன் வழிபாடும், சைவ சமயத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது என்பது வெளிப்படும்.

அடுத்தபடியாக, பத்துப்பாட்டில் ஒன்றாகிய திரு முருகாற்றுப்படை ஞாயிற்றை அழகாக வருணிக்கின்றது.

“உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதறு

பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு”

என்று கூறுவதால் கதிரவன் தோற்றத்தால் உலகம் மகிழ்ச்சி அடைகிறது என்கிறார் நக்கீரர். ஒளியும், ஒளிக்கு மூலமான கதிரவனும் இல்லையானால் உலகம் வாழமுடியாது என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கூறுவதுபோல, அன்றைய மெய்ஞானிகளும் கூறி உள்ளனர். வேதகாலத்தை அடுத்து ஸ்வேதாஸ்வதா உபநிடதம் தோன்றிய காலத்தில் சிவபெருமானுடைய அஷ்ட மூர்த்தங்கள் என்ற குறிப்பு பேசப்படுகிறது. அம் மூர்த்தங்களில் கதிரவனும் ஒன்றாகக் கூறப்படுகிறான்.

இவற்றிற்கு அடுத்தபடியாக சிலப்பதிகாரம், இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகும். அக் காப்பியம் தொடங்கும் பொழுதே, “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என்றே தொடங்குகிறது. நூலுள் கணவன், கள்வன் என்ற பொய்பழி ஏற்று கொலை யுண்டான் என்று கேள்வியுற்ற கண்ணகி ஆற்றொணாத் துயரடைந்து காலைக் கதிரவனைப் பார்த்து, “பாய்திரை வேலிப்படு பொருள் நீ அறிதி, காய்கதிர்ச் செல்வனே!” என்று விளிக்கின்றாள். இந்த அடிக்கு பகல் பொழுதில் எல்லாப் பொருளும் நன்கு காணப்படும் எனவே