பக்கம்:அருளாளர்கள்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 அருளாளர்கள்

நெருநலையாய் இன்றாகி நாளை யாகி

நிமிர்புன் சடை யடிகள் நின்றவாறே

(திருமுறை: 6-94-1)

என்று நாவரசர் வலிய இத்திருப்பாட்டில் தீ என்றும், திங்கள் என்றும், ஞாயிறு என்றும் கூறுகிறார். இங்கு குறிப்பிடப்பட்ட தீ, திங்கள், ஞாயிறு என்பவை வெவ் வேறானவை என்றாலும் ஒளியைத் தருகின்ற பொருள்கள் என்ற பொதுத்தன்மை பற்றி ஒன்றாகவே கொள்ளப்படும். திருநின்ற தாண்டகம் என்று கூறப்பெறும் இப்பதிகத்தின் ஐந்தாம் பாடலிலும்,

“தீயாகி, . . . . . .

*  s <    


நெடுங்சுடராய். . . . . . * 3 (திருமுறை. 6-94-5)

என்றும் குறிப்பிடுகிறார். இப்பதிகம் முழுதும் நாவரசர் இறைவனை, செழுஞ்சுடர், நெடுஞ்சுடர், எழுஞ்சுடர், ஆழல் வண்ணர், பரஞ்சுடர் என்றே கூறிச் செல்கின்றார். “தூண்டு சுடரணைய சோதி கண்டாய்”(6-23-1 என்றும் நாவுக்கரசர் பேசுவதால் இப்பெருமானுடைய காலத்தில் சிவவழிபாடும், ஒளி வழிபாடும் ஒன்றாகவே கருதப் பெற்றன என்பதை இப்பாடல்களைக் கொண்டு நன்கறியலாம்.

அடுத்தபடியாக திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் பதிகத்தில் . .


... . . கார்த்திகை நாள்

தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”

(திருமுறை. 21833)