பக்கம்:அருளாளர்கள்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சைவ சமயத்தில் ஒளி வழிபாடு 155

காணலாம். இதே அடிப்படையில் தான் “தமசோமா ஜோதிர்கமய’ (ஒளியை நோக்கி எங்களைச் செலுத்து வாயாக என்பன போன்ற வேதவாக்கியங்களும், தமிழரை அல்லாத வேதகால ஆசிரியர்களும் நாள்ா வட்டத்தில் இந்திரன் முதலானவர்களைத் தொழுவதை விட்டு விட்டு சோதி வழிபாட்டில் இறங்கினர் என்பதை அறிய முடிகிறது. : -

18ஆம் நூற்றாண்டுமுடிய சூரிய வழிபாடும், உருவ வழிபாடும் பின்னிப் பிணைந்திருந்தன. திருவருட் பிரகாச வள்ளலார் 19ம், நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி ஆன்மீக வளர்ச்சி அடைந்து ஏறத்தாழ ஐந்து திருமுறைகள் பாடி முடிக்கின்ற வரையில் இவ்விரு வழிபாடுகளையும் இணைத்தே பாடி உள்ளார். முதல் இரண்டு திருமுறை களில் மிக ஆழமான சைவ சமயப் பற்றும் அவரை ஆட் கொண்டிருந்தது. உருவ வழி பாட்டில் தொடங்கிய அவர் அம்பிகையின் வழிபாட்டிற்காக வடிவுடை மாணிக்க மாலை பாடுகிறார். இறைவனுடைய பல்வேறு வெளிப் பாடுகளில் சக்தி ரூபமாகிய அன்ன்ையின் வடிவமும் ஒன்று என்பது உண்மைதான். காலம் செல்லச் செல்ல புத்தம், சமணம் கிறிஸ்துவம் ஆகிய சமயங்களைப் பிறச் சமயங்கள் என்று ஒதுக்கி விடாமல் அவற்றில் உள்ள உண்மைப் பொருளை அறிய முற்பட்டார். புத்தம், சமணம் ஆகிய இரண்டும் கடவுள் என்ற பெயரில் ஏற்காவிட்டாலும் ஏனைய கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற சமயங்கள் கடவுள் பொருளைக் கருத்தில் கொண்டு அதற்கென்று சில இலக்கணங்களையும் வகுத்தன. இந்த எல்லாச் சமயங்களும் வெவ்வேறு பெயர்களில் கூறும் முழுமுதல் பொருளுக்கு இலக்கணம் வகுக்கையில் அப்பொருள் ஒளிவடிவானது என்பதையும், கருணையே வடிவானது என்பதையும் ஏற்றுக் கொண்டனர். உருவ வழிபாடு என்று வரும் பொழுதுதான் பிரச்சனை