பக்கம்:அருளாளர்கள்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சைவ சமயத்தில் ஒளி வழிபாடு 157

சமரச சன்மார்க்க சமயத்தை நிறுவ முயன்றார் வள்ளலார்.

மேலே கூறிய எல்லாச் சமயங்களிலும் ஏதாவது ஒன்று பொதுத் தன்மை உடையதாய், அனைத்துச் சமயங்களிலும் உள்ளதாய், அனைத்துச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் உள்ளதா என்பதை ஆராய்ந்த பெருமான் ஒரு மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்தார். பொதுத்தன்மை உடைய ஒன்றைத் தேடிச் சென்ற அவருக்கு ஒன்றுக்குப் பதிலாக இரண்டு பொதுத் தன்மைகள் கிடைத்தன. எல்லாச் சமயங்களும் தாம் கூறும் முதற்பொருள் ஒளி வடிவானது என்றே கூறின. அது மட்டுமல்லாமல் அப்பொருள் கருணை வடிவானது என்றும் கூறிக் கொண்டனர். எனவே மாறுபட்ட இச்சமயங்களை ஒருங்கே இணைக்கக் கருதியே வள்ளற் பெருமான் அனைத்துச் சமயங்களுக்கும் பொதுவான இவ் இரண்டு பண்புகளை ஒன்றாய் இணைத்து ஒரு தாரக மந்திரத்தை உருவாக்கினார்.

“அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி

தனிப் பெருங்கருணை அருட் பெருஞ்சோதி”

இதனை ஏற்றுக் கொள்ளாமல் எந்தச் சமயவாதியும் தங்கள் கடவுளுக்கு இது பொருந்தாது என்று கூறமுடியாது என்றாலும் வள்ளலாரை ‘சைவர்’ என்று முத்திரைக் குத்திவிட்ட காரணத்தால் பிற சமயத்தார் இதனை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. அப்பெருமானால் நிறுவிய சமரச சுத்த சன்மார்க்கம் ஆதரிப்பார் இன்றி நாளா வட்டத்தில் மங்கத் தொடங்கி விட்டது.

ஒளி வழிபாட்டின் தொன்மையையும், பொதுத் தன்மையையும் அறிந்து கொண்ட வள்ளலார் வடலூரில்