பக்கம்:அருளாளர்கள்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சைவ சமயத்தில் ஒளி வழிபாடு “ iso .

மூடி இருப்பதால் அந்த உடம்புக்கு ஒன்றும் நேர்வ தில்லை.

அறிந்ததைக் கொண்டு அறியாதவற்றை அறிவிப்பது என்பது பண்டுதொட்டு இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் மேற்கொண்ட ஒரு வழியாகும். வாக்கு மனோலயம் கடந்த பேரொளியை அறிவிக்க கதிரவன், சந்திரன் என்பவற்றின் ஒளியையும், தீயில் தோன்றும் உதாரணமாகக் காட்டினார். பொறி புலன்களால் அறியக் கூடிய இவ்ஒளியைக் காட்டி இது போன்றதுதான் பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்ட பேரொளி என்று கூறினார். பிறகு அனைவர் அனுபவத்திலும் கிட்டக்கூடிய விளக்கை உதாரணமாகக் காட்டினார். ஒளியைத் தருகின்ற விளக்கு, ஒளி என்ற இரண்டும் அபேதமாய் பேசப் பட்டன. இல்லற விளக்கது இருள் கெடுப்பது (4-1-8) என்று நாவுக்கரசர் கூறும் பொழுது ‘ஒளி’ என்பதற்குப் பதிலாக விளக்கு என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்.

இந்த அடிப்படைகளை மனத்துட் கொண்டுதான் வள்ளற்பெருமான் அனைத்துச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒளி வழிபாட்டிற்கு ஒரு வடிவு கொடுத்தார். சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி இன்று காணக் கிடைக்கும் பாடல்கள் அனைத்திலும் இறைவனைப் பேரொளியாகக் கண்டு வழிபடும் பழக்கம் தொடர்ந்து இருந்து வந்ததால் அந்த வழிபாட்டை உள்ளடக்கி “அருட்பெருஞ் சோதி’ என்ற தொடரையும் மனத்தால் மட்டும் நினைக்கக் கூடிய சோதிக்குப் புறத்தேயும் காண ஒரு வடிவு கொடுத்து ஒரு விளக்கை சத்திய ஞான் சபையில் நிறுவினார். - -

இத்தத்துவத்தின் உண்மை உணராத சைவம் முதலிட்ட சமயவாதிகள் அனைவரும் “தத்தம் சமயமே அமைவதாக அரற்றி மலைந்தனர்”, சமயங்களுக்குள்