பக்கம்:அருளாளர்கள்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 * அருளாளர்கள்



வேறுபாடு இல்லையெனினும் சமயவாதிகளிடையே முரண்பாடுகள் என்றுமே உண்டு. இந்த முரண் பாட்டிலேயே சுவை காணும் சமயவாதிகள் என்றுமே உண்மையை உணரப் போவதில்லை. உரை முயல்வதும் இல்லை. சிவனை வழிபடும் சைவர்கள் கோளகி சைவம் என்றும், மாவிரதிகள் என்றும், காபாலிகர்கள் என்றும், பாrண்ட சைவர்கள் என்றும், வீரசைவர்கள் என்றும், சைவ சித்தாந்திகள் என்றும், விரிந்து தம்முள் மலையக் காரணம் யாது? இவற்றை விட்டால் என்ன கிடைக்கும் என்று வள்ளற்பெருமான் இதோ பாடுகிறார்.

“சாதிசமயச் சழக்கைவிட் டேன்.அருட்

சோதியைக் கண்டேனடி - அக்கச்சி

சோதியைக் கண்டேனடி’

- (அருட்யா-5-4949)

இன்றுள்ள சமயப் பண்பாடுகளும், அதனால் விளையும் போர்களும், மனக் கோட்டங்களும் ஒழிந்து “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் வாக்கு நிலைபெற வேண்டுமானால் அதற்குரிய ஒரே வழி ஒளி வழிபாடே ஆகும். -