பக்கம்:அருளாளர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி

இன்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் வேதாரண்யம் என்று வழங்கப் பெறுகிற திருமறைக் காட்டில் கேடிலியப்ப பிள்ளை என்று ஒரு பெரியவர் இருந்தார். அவருக்குச் சிவசிதம்பரம் என்கிற பெயர் 32.6%) L-L ஒரு மகன் பிறந்தான், அவருடைய தமையனாருக்கு இந்தப் பிள்ளையைத் தத்துக் கொடுத்து விட்டு, தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்று, மறைக்காட்டில் எழுந்தருளிய இறைவனை வேண்டிப் பெற்றார் ஒரு மகனை. அந்த மகன் தாயுமானவர் என்ற பெயரைப் பெற்றார். அதற்குக் காரணம் கேடிலியப்ப பிள்ளை திருமறைக் காட்டில் தோன்றியவராக இருந்தாலும் திருச்சிராப்பள்ளியை ஆட்சி செய்து வந்த நாயக்கப் பிரமுகராகிய ஒருவரிடத்தில் பணிபுரிந்து வந்த காலத்தில் குழந்தை பிறந்தது. ஆதலினால் தாயுமானவர் அருளினாலே குழந்தை பிறந்தது என்று கருதி ‘தாயுமானவர் என்ற பெயரை குழந்தைக்கு இட்டார்.

அந்தக் குழந்தை சாதாரண ஏனைய குழந்தைகளைப் போல அல்லாமல் இறைவனுடைய திருவருளால் பிறந்த காரணத்தினால் பெருங்கல்வியும் பேராற்றலும் உடைய இளைஞனாகத் திகழ தொடங்கினான். இந்த நிலையில் கேடிலியப்ப பிள்ளை இறைவனடி சேர்ந்தார். அரசன், தந்தை மறைந்தாலும் மகனுடைய பேராற்றல் தெரிந்து தந்தை பார்த்து வந்த அரசியல் பணியை மகனும் பார்க்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/172&oldid=659495" இலிருந்து மீள்விக்கப்பட்டது