பக்கம்:அருளாளர்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 * அருளாளர்கள்



வேண்டுதலுக்கிணங்கி, தாயுமானவர் தந்தை பார்த்து வந்த பணியை சிலகாலம் பார்க்கின்ற நிலையில் அரசரும் இறையடி சேர்ந்தார். அரசன் இறந்த பிறகு அரசியார் அந்த அரசுப் பணியை மேற்கொண்டு தாயுமானவரைத் தமக்கு உதவியாக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். ஒருசில காலம் அரசுப் பணியில் இருந்த தாயுமானவர் என்ன காரணத்தினாலோ, முன்னை வினைப்பயன் சூழ்ந்த காரணத்தினால் என்று நினைக்க வேண்டி யிருக்கிறது, உலக வாழ்க்கையையே துறந்துவிட வேண்டு மென்ற முடிவுக்கு வந்தவராக அந்தப் பணியில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டுமென்று அரசியாரைக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இவருக்குத் தமையனாராக இருந்த சிவசிதம்பரம் என்பவர் வந்து தம்பியினுடைய மனத்தைப் பாடுபட்டு மாற்றி மட்டுவார்குழலி என்கிற அம்மையாரை மணம் முடித்து வைத்து விட்டார். மணம் முடிந்த பிறகு இல்வாழ்க்கையில் ஈடுபட்ட தாயுமானவருக்கு ஒர் ஆண் மகவு பிறந்தது. ஆண் மகவு பிறந்த சிறிது காலத்தில் தாயுமானவரது மனைவியார் மட்டுவார்குழலி இறைவனடி சேர்ந்தார். ஆகவே தாயுமானவர் துறவு வாழ்க்கைக்குப் பச்சைக் கொடி காட்டி ஆயிற்று என்று நினைக்க வேண்டி யிருக்கிறது. என்று அந்த அம்மையார் காலமானாரோ அன்றே அவர் பெரும் துறவியார் ஆகவும், எப்படியும் வீடுபேற்றை அடையவேண்டும் என்ற ஏகாக்ர சித்தத் தோடு துறவு நிலை மேற்கொள்ளவும் முடிவு செய்து விட்டார். அவருக்கு இறைவன் அருளாலே மெளனகுரு என்பவர் குருவாக எங்கிருந்தோ வந்து சேர்ந்தார். திருமூலர் பரம்பரையிலே வந்தவர் மெளனகுரு என்பதை தாயுமானவப் பெருந்தகை தமது பாடலிலேயே பாடுகிறார், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/173&oldid=1285848" இலிருந்து மீள்விக்கப்பட்டது