தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி 163
. . .மூலன் மரபில்வரு மெளன குருவே. . -
(தாயு:மெளனகுரு-1) என்று. மெளனகுரு என்ற காரணப் பெயரையுடைய அந்தப் பெருமகனார் தாயுமானவரை ஆட்கொண்டு, உலக பந்தங்களில் இருந்து அவரை முழுமையாக விடுவித்து ஆன்மிகத் துறையில் முன்னேற்றத் தொடங்கினார். அந்த வினாடியில் இருந்து தாயுமானவப் பெருந்தகை பாடல்கள் பாடுகின்ற பணியை மேற்கொண்டார்.
அருளய்யர் என்ற ஒரு அருமையான சீடர் தாயுமானவருக்கு அப்போதே வாய்த்து விட்டார். இல்லாவிட்டால் இந்தப் பெருமகனாருடைய பாடல்கள் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும். மிக அற்புதமான சீடராகிய அருளய்யர் தாயுமானவப் பெருந்தகை உளம் கனிந்து உவந்து உவந்து பாடுகின்ற போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அந்தப் பாடல்களை எழுதி வைத்து நமக்கு அந்த மாபெரும் செல்வம் கிடைக்குமாறு செய்து விட்டார். தாயுமானவர் பாடல்கள் ஏறத்தாழ 1452 உள்ளன. விருத்தங்கள், கழிநெடிலடி விருத்தங்கள், வெண் பாக்கள், கண்ணிகள் என்கிற முறையிலே பல்வேறு j)ILII6 பாடல்கள் 1452 ஆக மலர்ந்திருக்கக் காண்கின்றோம். இத்தனை பாடல்களையும் ஒரு முறை படித்தாலே தாயுமானவருடைய வளர்ச்சி நிலையை ஒருவாறு அறிய முடியும்.
முற்பகுதியில் அவர் பாடிய பாடல்கள் மிக அதிகமாக வட சொற்களைப் பெற்று விளங்கக் காணலாம். தொடக்கமாக உள்ள பாடல் அனைவரும்
அறிந்ததாகும்.