பக்கம்:அருளாளர்கள்.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


164 அருளாளர்கள்

அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்

ஆனந்த பூர்த்தி யாகி அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

அகிலாண்ட கோடி எல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கி னில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்

தந்தெய்வம் எந்தெய்வ மென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது

எங்கணும் பெருவ ழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்

என்றைக்கு முள்ள தெதுமேல் கங்குல்பக லறநின்ற எல்லையுற தெது.அது

கருத்திற் கிசைந்த ததுவே கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்

கருதிஅஞ் சலிசெய்கு வாம்.

- (5T : 1)

என்று இறை இலக்கணத்தைச் சொல்ல வந்த அந்தப் பெருமகனார், விக்கிரக வழிபாட்டைத் தாண்டி, உபநிடதங்கள் கூறுகின்ற முறையில் மிக அற்புதமாக இறை இலக்கணத்தைப் பேசுகிறார். அப்படிப் பேசத் தொடங்குகிற பாட்டிற்கு அடுத்த 3 வது பாடலில் தாயுமானவர் தம்முடைய அறிவுத்திறன், மொழி அறிவு எப்படிப் பணிபுரிந்தன என்பதை நமக்குக் காட்டுகின்ற முறையில் பாடலை அமைக்கின்றார். பல்வேறுபட்ட வடசொற்களை சிறிதும் மாற்றாமல், அதேநேரம் தமிழ்ப் பாடல் இலக்கணத்திற்குச் சிறிதும் முரண்படாமல் மிக அற்புதமாகப் பாடியிருப்பதைக் காண முடிகிறது. அத்துவித வத்துவைச் சொற்ப்ரகா சத்தனியை

அருமறைகள் முரச றையவே அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான