பக்கம்:அருளாளர்கள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி 165

ஆதியை அநாதி யேக தத்துவ சொரூபத்தை மதசம்ம தம்பெறாச்

சாலம்ப ரகித மான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை நித்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பொருளை

நிர்விஷய, சுத்த மான நிர்விகா ரத்தைத் தடத்தமாய் நின்றொளிர்

நிரஞ்சன நிராம யத்தைச் சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு

திவ்யதே சோம யத்தைச் சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர

தேவதையை அஞ்சலி செய்வாம்.

(5 : 4)

என்ற முறையில் அந்தப் பாடல் செல்வதைக் காண் கிறோம். ஆனால் இப்படிப் பாடுகின்ற பாடல்கள் பாடுகின்றவருடைய ஆற்றலை அறிவிக்கின்றதற்கும் பயன்படுமே தவிர சாதாரண மக்களுடைய மனத்தை ஈர்க்கப் பயன்படுமா என்பது சிந்தனைக்குரியது.

இப்படித் தொடங்கிய தாயுமானவர் பாடல்கள் போகப் போக மிக எளிய சொற்களைப் பயன்படுத்தி மக்களை ஈர்க்கின்ற பாடல்களாக அமைந்து விடுவதைக் காணலாம். அதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிகின்றது. இந்தப் பெருமகனார் உடைய வளர்ச்சி மிகுதியாக வளர வளர அதற்கேற்ற முறையில் அனுபவத்தைப் பெறப் பெற அந்த அனுபவம் வெளிப்படுகின்றபோது மிக எளிய சொற்களோடு கூடிய பாடல்களாக வெளிப்படுவதைக் காண்கின்றோம்.

நாநூறு வருஷங்களுக்கு முன்பிருந்த தாயுமானவப் பெருந்தகை புதுமை ஒன்றைப் புகுத்தினார். சமய